ரோமாபுரியில் இருக்கும்போது, ரோமானியனாக இரு

பெருமைமிகு ரோமானியர்களின் வசனமிது, இன்றைய நிலையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பும் இறப்பும் அதிகம் உள்ளது இத்தாலியில் தான்.

வெறிச்சோடிய சாலை

இத்தாலி நாடெங்கும் பல்வேறு கட்டுபாடுவிதித்து சாலைகள் வெறிச்சோடி இருக்க. சியன்னா நகர சாலையில் நடந்து சென்ற ஒருவர் வெறிச்சோடிய சாலையின் ஒரு வீட்டில் உள்ளவர்கள், “எங்கள் சியன்னா நீண்ட காலம் வாழ்க” என்ற பாடலை பாடியதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதை காண்பவர்கள் அனைவருக்கும், தங்கள் நகரத்தின் பெருமையை எந்த நிலையிலும் உயர்த்தி பிடிப்பதே மனித குலத்தின் மாண்பு என்பதை உணர்த்துகிறது.