மும்பை: மக்கள் பிரச்னைகளை தீர்க்காவிட்டால் பிரதமர் மோடியை அவர்களே ராஜினாமா செய்ய சொல்வார்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார்.

கட்சியின் அதிகாரப்பூர்வமான சாம்னாவில் அவர் கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: கொரோனாவால் 10 கோடி மக்கள்  வாழ்வாதாரம் இழந்துள்ளனர். 40 கோடி குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஊதியம் பெறும் நடுத்தர மக்கள் வேலையை இழந்து உள்ளனர். தொழில் மற்றும் வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடிக்கு பாதிக்கப்பட்டு உள்ளது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

கொரோனா மற்றும் பொருளாதார பிரச்சினையை தீர்க்க தவறியதால் இஸ்ரேல் மக்கள் அந்நாட்டு பிரதமருக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தியாவிலும் அதே நிலை ஏற்படும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் பிரதமர் மோடியை மக்கள் ராஜினாமா செய்ய சொல்லுவார்கள்.

ரபேல் விமானத்துக்கு இந்தியாயில் தரப்பட்ட வரவேற்பு வியப்பு அளிக்கிறது.  சுகோய், மிக் போன்ற போர் விமானங்கள் வந்தபோது இத்தகைய கொண்டாட்டங்கள் இல்லை. அணுகுண்டு மற்றும் ஏவுகணையுடன் பறக்கும் ரபேல் விமானம் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார பிரச்சினைகளை அழித்து விடாது.

10 கிராம் 51 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நாடு இப்படி இருக்கும் போது,  மகாராஷ்டிராவில் பாஜக சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் நட்டா கூறியுள்ளார். பொருளாதார பிரச்சினை, வேலைவாய்ப்பு இன்மை போன்ற பிரச்சினைகளை பற்றி அவர்கள் பேசுவதில்லை என்று அந்த கட்டுரையில் எழுதி உள்ளார்.