சென்னை:
சென்னை காசிமேடு மீன் சந்தையில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு இருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று அதிகாலை முதலே குவிந்த அசைவ பிரியர்கள், ஆர்வமுடன் மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். கடந்த வாரத்தை விட மீன் விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.
கடந்த வாரத்தைவிட மீன்களின் விலை வகையைப் பொறுத்து 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை குறைவாகவே இருந்தது. வஞ்சிரம், சங்கரா, சீலா ஆகிய வகை மீன்கள் கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.50 முதல் 100 வரை விலை குறைவாக விற்பனை ஆனது. இதனால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலில் கிடைக்கும் பெரிய வகை மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சில்லறையாகவும், ஏலம் முறையிலும் மீன்களை பொதுமக்களும் வியாபாரிகளும் வாங்கிச் சென்றதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.