சேலம்
இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஏராளமான மக்கள் தர்ப்பணம் கொடுத்துள்ளனர்.

இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு பல கோவில்களில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க முடியாத பலரும் இன்று தர்ப்பணம் செய்து முன்னோரைக் கரை சேர்ப்பது வழக்கமாகும்.

சேலம் நகரின் புகழ்பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட்டுள்ளனர். இன்று ஏராளமானோர் கோவிலில் கூடியதால் வரிசையில் நின்று அவர்கள் தங்கள் மூதாதையருக்குத் தர்ப்பணம் கொடுத்தனர்.

Thanx : Esan D Ezhil Vizhiyan
Patrikai.com official YouTube Channel