மைசூரு:

சேன் போல்டு உலக சாம்பியன், அவருடன் என்னை ஒப்பிட்டு பேசுகிறார்கள்.. நான் சாதாரணமானவன்,  வயக்காட்டில் ஓடுபவன் என்று கம்பாளா வீரர் ஸ்ரீநிவாசா கவுடா நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலம் தென் கன்னடா மாவட்டத்தில் நடைபெற்ற கர்நாடக மக்களின் பாரம்பரிய போட்டியான கம்பாளா எனப்படும் எருமைகளுடன் அதன் உரிமையாளர்கள் பங்குகொள்ளும் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. மூடபித்ரி என்ற கிராமத்தில் நடைபெற்ற இந்த போட்டியில்  சுமார்  250 ஜோடி எருமை மாடுகள் மற்றும் அதன் உரிமையாளர்களும் கலந்துகொண்டனர். இதில்,  ஸ்ரீநிவாச கவுடா என்ற இளைஞர், அதிவேகமாக ஓடி வந்து முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

அவரது ஓட்டத்தின் வேகம், பிரபல ஜமைக்கா ஓட்டப்பந்தைய வீரர் உசேன் போல்டின் வேகத்தைவிட அபாரமாக இருந்தது. அதாவது,  ஸ்ரீநிவாசா கவுடா  142.50 மீட்டர் தொலைவை வெறும் 13.62 வினாடிகளில் கடந்தார். இதை உசேன் போல்டு ஓட்டப்பந்தய வேகத்துடன் சமுக வலைதளங்களில் ஒப்பிடப்பட்டு, ஸ்ரீநிவாசா கவுடாக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீநிவாசா கவுடா,  கூறுகிறார், “மக்கள் என்னை உசைன் போல்ட்டுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் ஒரு உலக சாம்பியன், நான் ஒரு  வயலில் மட்டுமே ஓடும் ஒரு சாதாரண மனிதன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.

பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்டை தூக்கி சாப்பிட்ட ஸ்ரீநிவாச கவுடா…..