சென்னை: ஓய்வூதியதாரர்கள் 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை அவர்களது வங்கி கணக்கில் இருந்து எடுக்க வில்லை என்றால், அவர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்படும் என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
ஓய்வூதியம் எடுக்காத நபர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, ஓய்வூதியதாரர்கள் 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை அவர்களது வங்கி கணக்கில் இருந்து எடுக்க வில்லை என்றால், அவர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளது.