இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ (Pegasus spyware) உளவுச் செயலியின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், அந்நாட்டின் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டு, அதன் வாட்ஸ் அப் தகவல்கள் உள்ளிட்ட மொபைல் தரவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன.

அமித்ஷா குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோது கடந்த 2008-ஆம் ஆண்டே இஸ்ரேல் தயாரிப்பு உளவுக் கருவி பற்றி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஊடகவியலாளர் ராஜ்தீப் சரதேசாய் கடந்த 2019-ஆம் ஆண்டு எழுதிய ‘மோடி எப்படி வென்றார்?’ (‘2019: How Modi won India’), என்ற நூலின் 42-ஆவது பக்கத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மலையாளத்தில் வெளியாகும் ‘மாத்ருபூமி’ ஏடு இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சமூக ஊடகத்தில் பெகாசஸ் ஸ்பைவேர்’ (Pegasus spyware) பற்றின கிண்டலான வீடியோக்கள் மீம்ஸ்கள் என களைகட்டியுள்ளது.