சென்னை: பெகாசஸ் மென்பொருள் மூலம் சட்டவிரோதமாக உளவு பார்க்கபட்டது  தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி  தலைமையில்  கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம்  இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு தலைவர்கள், முக்கியஸ்தர்கள்,  பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டு, அவற்றின் அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இந்தியாவில்,  இந்தியாவில்  ராகுலகாந்தி உள்பட 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரு அமைச்சர்கள், 40 பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் ஹேக் செய்யப்பட்டு, அவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்திலும்  எதிரொலித்தது. இதனையடுத்து இதுகுறித்து மத்திய அரசு விளக்கமளித்ததோடு, யாரும் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்படவில்லை எனத் தெரிவித்தது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதைத்தொடர்ந்து பெகாசஸ் உளவு விவகாரத்தைகண்டித்து, இன்று (22ந்தேதி) நாடு முழுவதும்  காங்கிரஸ் சார்பாக, அனைத்து மாநில ஆளுநர் அலுவலகங்கள் முன்பும் காங்கிரஸ் அடையாள போராட்டம் நடத்துமென்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், அதன் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அழகிரி,  இந்தியாவின் அடிப்படை ஜனநாயகத்தையே தகர்த்து விட்டார்கள்.. மோடி அரசாங்கம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.