நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளை வென்று வருகிறது.

இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான டைகர் விருதை வென்றது.

இந்த விருது விழாவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனால் கொரோனா அச்சுறுத்தலால் நேரில் கலந்துகொள்ள முடியாமல் போனது. அந்த விருது சென்னை வந்தடைந்தது.

இந்நிலையில் ‘கூழாங்கல்’திரைப்படம் சிறந்த இந்திய திரைப்படமாக ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திரைப்பட கலைஞர்களை கவுரவிக்கும் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

[youtube-feed feed=1]