இந்திய – பாகிஸ்தான் ஒற்றுமையை போற்றும் வகையில் இயற்றப்பட்டு பாடப்பட்டுள்ள ’அமைதி கீதம்’ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இன்று பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது.
ஆனால், இரு நாடுகளுக்கு இடையே காஷ்மீர் பிரச்சினை இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே பதற்றம் சூழலே நிலவி வருகிறது.
இந்நிலையில், இரு நாட்டின் தேசிய கீதங்களையும் இணைத்து, அமைதியை அதிகரிக்கும் நம்பிக்கையில் ஒரு புதிய பாடல் வீடியோ ஒன்று உருவாகப்பட்டுள்ளது.
இந்த பாடலுக்கு “அமைதி கீதம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடலை இந்திய மற்றும் பாகிஸ்தான் பாடர்கள் பாடி உள்ளனர்.
இந்த அமைதி கீதத்தை, இரு நாடுகளுக்கு இடையே அமைதியை வேண்டிவரும், பேஸ்புக் குழுவான `வாய்ஸ் ஆஃப் ராம்` குழு இதனை வலைதளத்தில்வ பதிவேற்றி பகிர்ந்துள்ளது.
இந்த பாடலுக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு நாடுகளை சேர்ந்த சமூக ஊடக பயன்பாட்டாளர்கள், பாடலை கேட்டு அதற்கு பின்னூட்டம் அளித்து பாராட்டி வரகின்றனர்.
“நமது எல்லையை கலைக்காக திறந்தால் அமைதியும் அதனுடன் வரும்” என்ற வாசகத்துடன் அந்த வீடியோ பாடல் தொடங்குகிறது.
அதைத்தொடர்ந்து, இந்தியாவின் தேசிய கீதமான `ஜன கன மன` மற்றும் பாகிஸ்தானின் தேசிய கீதமான `பாக் சர்சமின்` பாடலை பாடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பாடல் தொடர்பாக, ‘வாய்ஸ் ஆஃப் ராம்’ குழுவின் இயக்குநர் ராம் சுப்ரமணியன் ‘கேட்ச் நியுஸ்’ என்ற இந்திய வலைத்தளத்தில் குறிப்பிடுகையில், “பலர் அமைதி பற்றி பேச அஞ்சுகின்றனர் ஆனால் அந்த பயம் தேவையற்றது” என்று தெரிவித்துள்ளார்.
“என்னை பொறுத்தவரை இந்த வீடியோ ஒரு புது தொடக்கமாக இருக்கும்; அமைதியை நோக்கிய ஒரு சிறு அடி” என்றும், “இந்த வீடியோ பாகிஸ்தானில் வைரலாகும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
இரு நாடுகளிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த பாடல்.
`வாய்ஸ் ஆஃப் ராம்` குழுவினர் ஏற்கனவே ஆகஸ்ட் 11-ம் தேதி, பாகிஸ்தானின் தேசிய கீதத்தை பாடி, அதை வலைதளங்களில் பதிவேற்றி பகிர்ந்தது. இது 468,000 பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.