
சென்னை முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் P C ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் “முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவரை அவரது வேலையை செய்ய விடுங்கள். அரசியல் எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். மக்களாகிய நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இது போன்ற இன்னல்களை கடந்து வர முடியும்.
rஇந்த பிரச்சினைகள் எல்லாம் முடிந்த பிறகு அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் சண்டைகளை வைத்துக் கொள்ளட்டும். அரசியல்வாதிகளின் உண்மையான குணம் மக்களாகிய நமக்கு தெரியும். அரசியல்வாதிகள் இதில் விளம்பரம் செய்ய மக்கள் நாம் அனுமதிக்கக் கூடாது’’ எனக் கூறியுள்ளார்.

Patrikai.com official YouTube Channel