
நொய்டா
வாடிக்கையாளர்களின் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக பே டி எம் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
தற்போது ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இவ்வகையில் பல நிறுவனங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனை சேவையில் உள்ளன. இதில் பே டி எம் நிறுவனமும் ஒன்றாகும். இந்த செயலி மூலம் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பண பரிவர்த்தனை செய்ய முடியும்.
பே டி எம் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களின் விவரங்களை வெளியாருக்கு தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு உண்டானது, இதை பே டி எம் நிறுவனம் மறுத்துள்ளது. தன்னுடைய வாடிக்கையாளர்கள் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் யாருக்கும் வெளியிடப்படவில்லை எனவும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது
Patrikai.com official YouTube Channel