பணிபுரியும் இடத்தில் நடக்கும் பாலியல் கொடுமை, அத்துமீறல் உள்ளிட்ட பிரச்சினைகளை பெண்கள் துணிந்து சொல்ல ஹாலிவுட்டில் #MeToo என்ற இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

தனது ட்விட்டர் இது குறித்து பதிவிட்டுள்ள பாயல் கோஷ் :-

அனுராக் காஷ்யப் என்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இந்த புத்திசாலி மனிதருக்கு பின்னால் இருக்கும் தீய சக்தியை நாட்டு மக்கள் பார்க்கும் வகையில் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனக்கும் என் பாதுகாப்பும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை நான் அறிவேன். தயவு செய்து உதவுங்கள்’ என பதிவிட்டுள்ளார் .

[youtube-feed feed=1]