
கொரோனா தொற்றுக்கு ஆளான தெலுங்கின் முன்னணி நடிகர் பவன் கல்யாண், தனது ரசிகர்களுக்கு அப்டேட் தந்துள்ளார்.
பவன் கல்யாண். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பாதிப்பின் தீவிரம் குறைந்ததால், வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
பவன் கல்யாண் இப்போது தனது பண்ணை வீட்டில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். ட்ரிப்ஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் அவருக்கு பண்ணை வீட்டிலேயே அளிக்கப்படுகின்றன. மருத்துவர்கள் 24 மணிநேர கண்காணிப்பில் உள்ளனர்.
“உடல்நிலை தேறி வருகிறது. விரைவாக குணமடைந்து வருகிறேன். கொரோனா தொற்று ஏற்படாமல் அனைவரும் மிக கவனமாக இருங்கள் என கூறியுள்ளார். மேலும், மாநிலத்தில் வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் போதாமையாக இருப்பதாகவும், மாநில அரசு அதனை முதலில் கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
[youtube-feed feed=1]