திருவண்ணாமலை:

னி மாத பௌர்ணமி இன்று தொடங்கி, நாளை காலை 11 மணிவரை உள்ளது, இந்த நிலையில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுவார்கள். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த 3 மாதங்களாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஆனி மாதமும் கிரிவலம் செல்வதற்கும் தடை விதித்து ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,“ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 4 மற்றும் 5-ம் தேதி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை” என்றார்.