பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நமீதா திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறி விட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர் உள்ளனர்.

இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில் சிபி வெற்றி பெற்று இந்த வீட்டின் தலைவரானார். இதனை தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்றது, இந்த வாரம் இரண்டு, அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே நாமினேஷன் லிஸ்டில் வந்தனர். அதன்படி அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

முதல் ப்ரோமோ : ’அக்‌ஷராவை உன் கிட்ட இருந்து பிரிக்கணும்ன்னா அதுக்கு 2 நிமிஷம் ஆகாது’ என்கிறார் அபிஷேக். அதற்கு ‘பார்த்ததுமே கண்டுப்பிடிக்க இது என்ன பாரத விலாஸா? பிக் பாஸ் வீடுங்க. உங்க கூட இருக்கவங்க எல்லாரும் உங்கள செஞ்சிட்டு இருக்காங்க’ என பிரியங்காவிடம் கூறுகிறார் ராஜு. அப்போது, ‘நான் தான் செய்றேன்… எனக்கு அட்டன்ஷன் கிடைக்கும். இவ கூட ஒட்டினா தான் என் மூஞ்சு டிவி-ல தெரியும்னா, நா பண்றேங்குறேன்’ என்கிறார் அபிஷேக். இது ரொம்ப கேவலமான எண்ணம்’ என்கிறார் அண்ணாச்சி. அதற்கு ‘அப்படியே வச்சிக்கோங்க’ என்கிறார் அபிஷேக்.

இரண்டாவது ப்ரோமோ : கேமரா முன் நின்று, இந்த வீட்டில் மெசேஜ் கேம் விளையாடுகிறார்கள், இது எந்த விதத்தில் நியாயம் என ஸ்ருதி பேசி கொண்டிருக்கிறார். மறுபுறம் வருண் மற்றும் அபிஷேக் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் பிரியங்கா, இங்கு சரி தவறு என எதுவும் இல்லை,ஆனால் மற்றவர்களை மூளை சலவை செய்வது தவறு என கூறுகிறார். அதற்கு அபிஷேக் நான் அப்படி தான் செய்வேன் என கூற, அப்போது குறுக்கிடும் வருண், அதே போலத்தான் நான் அதனை தடுப்பது தவறு என நீயும் கூறமுடியாது என்கிறார். அதற்கு பிரியங்கா, இங்கு எதோ நடக்கிறது என்கிறார்.

மூன்றாவது ப்ரோமோ : அபினய் வாடி, வருண் குறித்து தன்னிடம் தவறாக கூறியதாக நேரடியாக வருணிடமே கூறுகிறார். நான் முன்னாடியே நின்று பேசுவேன் எனக்கு பின்னாடி பேச வராது, நான் இப்போது வருண் முன்னாடியே கூறுகிறேன், உங்களை பற்றி அபினய் என்னிடம் தவறாக கூறினார் என்கிறார். இதனை தொடர்ந்து சிபி, அபினய் வாடிபாவ்னி ஆகியோர் வெளியே நின்று பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பாவ்னி இது வெறும் கேம் ஷோ தான், நீங்கள் நேரடியாக வருணிடமே கூறுங்கள் என்கிறார். அதற்கு அபினய் வாடி, நான் உனக்கு விளக்கம் தருகிறேன் என கூற அதற்கு பாவ்னி இல்லை, வேண்டாம் என கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். அபினய் வாடி மற்றும் பாவ்னி தற்போது நண்பர்களாக உள்ளார்.