அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய ஆர்.பி உதயகுமார், “அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் தொடர்பாக விரைவில் கணக்கெடுப்பு நடத்தப்படும். 5 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலங்களில் குடியிருப்பு கட்டி வசிப்பவர்களுக்கு வருமான உச்சவரம்பை அறிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். வருமான உச்சவரம்பின் அடிப்படையில், அங்கு வசிப்போருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.