சென்னை:

கோயில் நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு பட்டா வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சென்னை  உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

‘அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற அரசாணையை ரத்து செய்ய கோரி ராதா கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில்,  சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இநத் வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும்,

கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக  தெரிவித்து உள்ளது.

மேலும், ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணை மத உணர்வு களுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் கூறி உள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.