சென்னை:

மிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் ஆங்காங்கே உள்ளது. இதில் பலர் பல ஆண்டுகளாக  குடியிருந்து வரும் நிலையில், அவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்தது.  பின்னர் அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதையடுத்து, வழக்கு குறித்து  தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் அப்பகுதி பொது மக்கள் வீடுகள் கட்டி குடியிருக்கின்றனர். மேலும், வணிக வளாகம், ஓட்டல், விடுதிகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். தாங்கள் குடியிருக்கும் வீடு மற்றும் வணிக வளாகத்திற்கு பட்டா வழங்கவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.