மேஷம்
மனைவியின்/ கணவரின் முன்னேற்றம் உங்களையும் உங்க குடும்பத்தி உள்ளவங்களையும் சந்தோஷ அருவியில் குளிக்கச் செய்யும். எந்த முயற்சியுமே உடனுக்குடன் பலனளிக்கும். சிறிது காலத்துக்கு முன் வரை இருந்து வந்த மந்த நிலையும், நிதானப்போக்கும் இருக்காது. பயமோ டென்ஷனோ வேண்டாங்க. டாடிக்கு விரைவில் நல்லது ஏற்படும்.அதைப் பற்றி அறிவிப்பு இப்போ வரும். இத்தனை காலம் மனசையும் உடம்பையும் வாட்டிக்கொண்டிருந்த பிரச்சினைகள் கல் எறிந்தவுடன் பறந்தோடும் பறவைகள் மாதிரி ஓடியிருக்குமே. நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது. நிறையச் செலவுகள் உண்டு. கொஞ்சம் தயாரா இருங்க. அந்தச் செலவுகளால் பிற்காலத்தில் பெரிய நன்மைகள் உண்டு.
சந்திராஷ்டமம்: செப் 5 முதல் செப் 7 வரை
ரிஷபம்
சின்னதாகக் காலில் வலி வீக்கம் இருந்தாலோ அடி பட்டாலோ முதல் உதவி சிகிச்சை செய்ய டாக்டரிடம் போங்க. நீங்களே செல்ஃபி வைத்தியமெல்லாம் செய்துக்க வேண்டாங்க. ஆனால் இப்படியெல்லாம் இனி நிகழாது . டோன்ட் ஒர்ரி. தைரியமும் வீரமும் அதிகரித்து மனதில் இருந்ததை வாய்விட்டுக் கேட்பீர்கள். இன்னும் கேட்கவில்லையா? எனில் ஒரு சின்ன அட்வைஸ். கேட்பதைச் சுள்ளென்று கேட்காதீர்கள். குரலில் பணிவு இருப்பது போல் நடிக்கவாவது செய்யுங்களேன். வாக்குவாதத்தைத் தவிர்க்கப்பாருங்க. அடி சக்கை. என்றைக்கோ செய்த முதலீடுகள் இப்போ பலன் கொடுக்கும். வரவே வராது என்று கணக்கில் சிவப்புக் கோடு போட்டு முடித்த விஷயங்கள் இப்போது வருமானமும் லாபமும் கொடுக்கும்,
சந்திராஷ்டமம்: செப் 7 முதல் செப் 9 வரை
மிதுனம்
திடீர் உத்யோகம் கிடைக்க வாய்ப்பிருக்கு, அதுவும் வெளிநாட்டில் கிடைக்கலாம். பாஸ்போர்ட்டுக்காகக் காத்திருந்தவர்கள் அது கிடைத்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பீங்க. தந்தைக்கு ஏற்பட்டிருப்பதெல்லாம் தற்காலிகமான பிரச்சினைகள்தான். பெரிதாக எண்ணி பயப்படாதீங்க. வாக்கினால் நன்மை ஏற்படும், குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டு. வாயை இறுகத் தைத்துக்கொண்டு பேச்சை அடக்கினால் நல்லது. சுளீர் சுளீர் என்று நாக்கைச் சாட்டைபோல் சுழற்றாதீங்கப்பா. அது பூமராங் மாதிரி செயல்படும். நீங்க நல்லது பேசினால் அதன் நற்பலன் உங்களுக்கும் உண்டு என்பதை நினைவுல வெச்சுக்குங்க. பணம் செலவழிந்தால் அதை நீங்க செலவுகளாய் நினைக்காமல் முதலீடா நினைச்சுக்குங்க.
சந்திராஷ்டமம்: செப் 9 முதல் செப் 12 வரை
கடகம்
கட்டாயமா யாருக்கும் சாபம் இடவே கூடாது. நல்ல வார்த்தைகள் மட்டுமே வாயில் வரு மாறு பார்த்துக்குங்க. உங்களுக்கு உங்க மேலேயே நம்பிக்கை இல்லைன்னா என்ன செய்யறது? தன்னம்பிக்கை உங்களுக்கு எப்பவும் நல்லாத்தான் இருக்கும், சமீபத்தில்தான் அது மிஸ் ஆயிடுச்சுங்க. பூனை மாதிரிப் பதுங்கியிருந்த நீங்க, நல்ல காரணங்களுக்குப் புலி மாதிரி பாய்வீங்க. குட் லக். நியாயத்துக்கும் நேர்மைக்கும் புறம்பான காரிங்களைச் செய்யும் படி உங்களை யார் வற்புறுத்தினாலும் பெரிய எழுத்தில் “நோ” சொல்லிடுங்க. அது பிறகு உங்களை விடாமல் பிடிச்சுக்கிட்டா எதிர்காலம் என்னங்க ஆறது? செல்வாக்கும் அதிகார மும் பொறுப்பான பதவியும் உங்களை ‘கெத்’தாக வைக்கும். கர்வமின்றிப்பேசுவது நல்லது.
சிம்மம்
நீங்க விரும்பியது கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. நல்ல நல்ல செலவுகளும் வரும். அதை மிஞ்சும்படியான வருமானமும் வரும். தந்தைக்குப் பாராட்டும் பெருமையும் கிடைக்கும்.அவர் அலுவலகத்தில் அவருக்கு செல்வாக்கு மிகவும் அதிகமாகும். மருத்துவத் துறையிலும் கட்டத்துறையிலும் உள்ளவங்களுக்கு நன்மை உண்டு. குழந்தைங்க உங்களைப் பெருமிதம் அடையச் செய்யுமளவு சாதனைகள் செய்து பாராட்டு வாங்குவாங்க. தயவு செய்து இப்போதைக்கு வேறு வேலை மாறுவது பற்றி நினைச்சும் பார்க்காதீங்க. நண்பர்கள் அபாரமாக உதவுவார்கள். குறிப்பாக எதிர்பாலினத்தினர் உங்களுக்காக மனப்பூர்வமாக நன்மைகள் செய்வார்கள். அதை நன்றியுடன் நினைவில் கொள்ளுங்க.
கன்னி
பல காலமாகத் திட்டமிட்டிருந்த கோயில் குளம் / வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குலதெய்வப் பயணங்கள் தடைப்பட்டாலோ, தாமதமானாலோ கவலை வேண்டாம். இந்தத் தடை கூடிய விரைவில் நீங்கும். நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டு வருவீங்க. குழந்தைகளுக்கு அரசாங்க நன்மைகள் கிடைப்பது ஒரு புறம் இருக்கட்டும். உங்களுக்கே அரசாங்கத்தால் லாபம் உண்டு. குழந்தைகள் மேடை ஏறிக் கைதட்டலும் பரிசும் வாங்குவாங்க. சகோதர சகோதரிகளுடன் சற்று முகத்தைத் தூக்கி வெச்சுப்பீங்க. புதுசா வாகனம் வாங்கிக் குடும்பத்துடன் சந்தோஷமா ஊர் சுற்றுவீங்க. திடீர்னு புது வேலை கிடைச்சு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சம்பளம் கூட நீங்க நினைச்சதைவிடக் கூடவே இருக்கும்.
துலாம்
குழந்தைங்க சின்ன சின்ன ஏமாற்றங்கள் தரக்கூடும். அவங்களுக்கு பாதிப்பிருக்காது. ஆனால் அவங்களுக்கு உங்களால டென்ஷன் வந்துடக்கூடாதில்லையா. அதை கவனமாப் பார்த்துக்குங்க. கொஞ்ச நாட்களில் அவங்களை நீங்க பெருமைப்படுத்தப்போறீங்க. இத்தனை காலம் ஓடி ஒளிஞ்சுபிடிச்சு விளையாடிக்கொண்டிருந்த தன்னம்பிக்கை ஒரு வழியா உங்க கிட்ட வந்து ஒட்டிக்கும். பேச்சில் ஒரு விதக் கவர்ச்சி அம்சம் இருப்பதால் உங்களை எல்லோருக்கும் ரொம்பவே பிடிக்கும். மேடைப்பேச்சில் வெளுத்து வாங்கிக் கைதட்டல் பெறுவீங்க. ஓவரா அலட்ட வேண்டாம். அப்பாவுக்கும் உங்களுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தயவு செய்து பணிஞ்சு போங்களேன். அவருக்கு ஒரு கஷ்டம் என்றால் நீங்கதானே முதல்ல விரைந்து உதவப்போறீங்க? அதை அவருக்குப் புரிய வைங்க.
விருச்சிகம்
கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்படுவதெல்லாம் சகஜம். அதைப் பெரிதாக நினைத்துத் தூக்கத்தையும் நிம்மதியையும் இழக்காதீங்கப்பா. முரட்டுத்தனம் , பிடிவாதம் வாக்குவாதம் என்று பயிற்சி செய்யாதீங்க. மென்மையும் கருணையும் இருந்தால்தான் வீடும் நாடும் உங்களை விரும்பும் என்பதை நினைவில் கொள்ளுங்க. அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் நன்மைகள் எதிர்பார்த்திருந்தா அது இப்போ முயற்சியே செய்யாமல் உங்களுக்குக் கிடைக்குங்க. வாராக்கடன்கள் வசூலாகும். நீங்க கலைத்துறையில் இருப்பவரா? சரி அப்படியானால், ஜெயிச்சு மேலே வந்து முன்னேறிடுவீங்க. மெல்ல மெல்ல உயர ஆரம்பிப்பீங்க. பேசுவது பலிக்கும். தடைகள் தாமதங்கள் விலகி, நினைத்ததெல்லாம் வேகமா நடந்தேறும்.
தனுசு
குடும்பத்தில் காணாமல் போயிருந்த சந்தோஷமும் நிம்மதியும் , அமைதியான உறக்கமும் நல்ல முறையில் உங்களை வந்தடையும். சண்டை சச்சரவுகள் தீரும். சிநேகிதர்களிடம் சற்று முறைத்துக் கொள்வீர்கள். என்ன செய்ய, அவர்கள் செய்வதும் நியாயம் அல்லவே. டோன்ட் ஒர்ரி. சமாதானமாயிடுவீங்க. நிறையச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். அவை நன்மை யும் லாபமும் மகிழ்ச்சியும் தரும் குதூகலச் செலவாகவே இருக்கும். உணவைச் சுத்தமான சுகாதாரமான இடங்களில் சரியான நேரத்தில் சாப்பிடுங்க. ஃபுட் பாய்சன் ஆகாமல் பார்த்துக் குங்க. அரசு வாகன யோகம் உண்டாகும் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு நிலம் கிடைக்கும். வாகனங்களைக் கையாளும்பொழுது கவனம் தேவை. கல்வியில் மேன்மை நிலை உண்டாகும் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் .குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும்.
மகரம்
குடும்பத்தினரின் புத்திசாலித்தனத்தால் உறவினர் மத்தியில் ஒற்றுமையும் நன்மையும் ஏற்படும்.அதே மாதிரி நீங்க புத்திசாலித்தனமாய் நடந்து கொண்டு கம்பெனிக்கு லாபம் ஏற்படச்செய்வீங்க. அதனால் உங்களுக்கும் பாராட்டும், புகழும் ஏற்படும். உடன் பிறப்பு களுடன் நல்லுறவு உண்டாகும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் வீடு கட்டும் யோகம் உண்டாகும் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும் பணக் கஷ்டம் நீங்கும் தகவல் தொடர்பு சிறப்படையும் வீட்டு உபயோகப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். உடல் உழைப்பு அதிகரிக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டை புதுப்பிக்கும் பாக்கியம் உண்டாகும் விவசாயம் சிறப்படையும். செய்யும் செயல்கள் எல்லாம் வெற்றியடையும்.
கும்பம்
நண்பர்கள் நல்லவங்களா அமைவது வரம். அந்த வரம் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. நம்புங்க. அவங்க உங்களுக்கு நன்மைதான் செய்வாங்க. ஆரோக்யத்தை மிக முக்கியமாகப் பார்த்துக்குங்க. சகோதர சகோதரிகளுக்குப் பெரிய பெரிய நன்மைகளும் லாபங்களும் ஏற்படுமுங்க. அவங்க உங்களை நன்றியோடு நினைப்பாங்க. அவங்களோட நீங்க ஜாலியா நாலு இடம் சுற்றுவீங்க. அவங்களுக்கு அரசாங்கத்தால் நன்மை விளைஞ்சுதேன்னு பொறாமை கொள்ளாமல் சந்தோஷம் கொள்ளுங்க.இப்போ இவங்களுக்கு ஏற்பட்ட மாதிரி உங்களுக்கும் அரசாங்க நன்மை கிடைக்கப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. மெதுவாய் நம்தையின்மேல் அமர்ந்து ஊர்ந்து வந்துகொண்டிருந்த நல்ல விஷயங்கள் எல்லாம் இனி நாலுகால் பாய்ச்சலில் குதிரை மேல் ஓடி வரும். பயத்தைத் தூக்கிப்போடுங்க.
மீனம்
கணவருக்கு/ மனைவிக்கு திடீரென்று பதவியோ சம்பளமோ உயரும். யார் கண்டது. இரண்டுமே உயரக்கூடும். தந்தைக்கு சிறு உபாதைகள் வந்தாலும் உடனுக்குடன் சரியாகி நிம்மதியளிக்கும். அம்மாவுக்குப் பாராட்டும் புகழும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான விரிவாக்கம் இருக்கும். உங்க அலுவலகத்தில் பெரிய முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியாதுங்க. நத்தை அல்லது ஆமையின் வேகத்தில்தான் எல்லாமே நடக்கும். பரவாயில்லை. விடுங்க. கூடிய சீக்கிரத்தில் எல்லாமே தானாய்ச் சரியாகும். தலைமைப் பதவி கிடைக்கும் பேச்சில் அதிகாரம் தூள் பறக்கும். பரம்பரை நிலத்தில் பங்கு கிடைக்கும். புத்தி கூர்மை அதிகரிக்கும். சமயோசிதமாக செயல்படுவீர்கள் வாக்குவன்மை அதிகரிக்கும்