மேஷம்

குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். கல்விச் செலவுகள் சற்று கூடுதல் ஆனாலும் மன மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு இனிய வாரம் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வயதானவர்களுக்குச் சற்று உடல்நிலையில் தொல்லைகள் கொடுத்து சரி செய்யக்கூடிய நாளாகும். பொருட்களின் மீது கவனமாக இருங்கள். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். வெளிநாடு செல்வதற்கு பலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் அநாயாசமாகவும், வெற்றிகரமாகவும் எதிர்கொள்வீங்க. நிறையச் செலவுகள் புதிதாக ஏற்பட்டாலும் திடீர் லாபமும் உண்டு. செலவுகள் சுப காரணங்களுக்காகவும் முதலீட்டுக்காகவும்தான் இருக்கும்.

ரிஷபம்

குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் உறவு நிலை நன்றாக இருக்கும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் உத்தியோகத்தில் உள்ளவங்கஉயர்நிலையை அடைவாங்கமன நிம்மதி கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவாங்கநண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மன மகிழ்ச்சியும் உண்டாகும் மாணவர்களின் கல்வித் திறன் நன்றாக வெளிப்படும் காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு நீங்க எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். திடீர் லாபங்கள் கட்டாயம் உண்டு. வேலை பார்க்குமிடத்தில் அனுபவம் வாய்ந்த பெரியவரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருந்து வரும் திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்

மிதுனம்

குடும்பத்தில் அமைதி தவழும் ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. நண்பர்களுக்கு நன்மை செய்து நெகிழ வைப்பீர்கள். லாபத்தைப் பொருத்தவரை இனிய வாரமாக இருக்கிறது. பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலமானவர்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவங்களோட ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்துக்கிட்டிருந்தகருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவங்கநல்ல நிலையை அடைவீங்க. நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை தேடிக்கிட்டிருக்கறவங்க நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவார்கள்.

கடகம்

நீங்க பல மாசங்களா எதிர்பார்த்துக்கிட்டிருந்த பண உதவி கெடைக்கும். ரொம்ப காலமா வசூலாகாமல் இருந்த பணம் திரும்பக் கெடைக்கும். நல்ல நிகழ்வுகள் உண்டுங்க. மாணவர்களுக்கு கல்வி நிலை நல்லா இருக்கும். உயர்கல்வி படிக்க கூடியவங்களுக்கு முன்னேற்றமான வாரமா இருப்பதால ஆராய்ச்சிக் கல்வியில் உள்ளவங்க வெற்றி பெறுவார்கள். நீங்க புது உத்யோகம் பற்றி எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். குடும்பத்தில உள்ள இளையவங்களோட உங்களுக்கு ஒற்றுமை நல்லா இருக்கும். லேடீஸ்க்கு மிக நல்ல வாரம் ஆகும். ஆடை ஆபரணச்சேர்க்கை சேர்வதற்கு வழி வகை உண்டு.  திருமணம் மாதிரியான சுபகாரிய முயற்சிகள் நல்லபடியா சக்ஸஸ் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை அருமையா இருக்கும் புதிய ஃப்ரெண்ட்ஸ் அறிமுகமாவார்கள்.  உத்தியோகத்துல உள்ளவங்களுக்கு நிர்வாகத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்வதற்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்

சொந்தத் தொழில் செய்யறவங்களுக்கு நெறையப் புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன் கியூ கட்டி நிற்கும். பொருளாதாரத்தில் குட்டியூண்டு அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமா அதையெல்லாம் எதிர்கொண்டு சமாளிப்பீர்கள் பொருளாதாரத்தில் சின்னதாய் ஒரு ஏற்றம் உண்டாகும்.  நீங்க ஸ்டூடன்ட்டா? அப்பிடின்னா கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்விக்காக ஃபாரின் செல்லும் வாய்ப்புகள் கைவரப் பெறுவீங்க. குடும்ப ஒற்றுமை நல்லா இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமா.. ஹாப்பியா இருக்கும். காதல் வலையில் விழுந்திருக்கறவங்களுக்கு சந்தோசமான பல பல நிகழ்வுகள் இருக்குங்க. சொந்தத் தொழில் செய்யறவங்க ஏற்றம் காண்பார்கள். மாணவர்களின் கல்வி நிலை நல்லபடியா உயரும். இத்தனை காலமா விசா தொடர்பான பிரச்சினைகள் இருந்தவங்களுக்கு  நல்லபடியா வெற்றி கிடைக்கும்.

கன்னி

ஃபாரின்ல வசிக்கறவங்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல நியூஸெல்லாம் கெடைக்கும். வெளிநாடுகளில் இருந்து தனவரவு எதிர்பார்த்துக்கிட்டிருந்தவங்களுக்கு கட்டாயம் குட் நியூஸ் உண்டு. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவங்களுக்கு இனி எந்த விதமான தடையும் தாமதமும் ஏற்படாம சல்லுன்னு முன்னேற்றம் உண்டுங்க. அரசு தொடர்பான காரியங்கள் நல்லபடியா முடிய வாய்ப்பு உள்ளது. கலைத் துறையிலும் பத்திரிகைத் துறையில் உள்ளவங்களுக்கு ஏற்ற மிகுந்த வாரம் ஆகும் தன வரவு உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். உத்தியோகத்துல உள்ளவங்களுக்கு நிர்வாகத்தில் உள்ளவங்க கிட்டேயிருந்து  நல்ல பெயர் கெடைக்கும். உங்க மகனோ மகளோ  மெல்ல மெல்ல சக்ஸஸ் அடைவதைப் பார்த்து ஹாப்பி ஆவீங்க.

துலாம்

சொந்த தொழில் செய்யறவங்களுக்கு அலைச்சல் அதிகமா இருக்கும்.  ஸோ வாட்? இவற்றால் ஆதாயம் உண்டாகும் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்குங்க. உயர்கல்விக்காக பிரயாணத்தை எதிர்நோக்கிக்கிட்டிருக்கறவங்களுக்கு சற்று டிலே ஆவதற்கு வாய்ப்பு இருக்குங்க. அதுக்காக மனசைத் தளர விட்றாதீங்க. நண்பர்களுக்கு கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ள மூத்தவங்களோட ஸ்லைட்டா கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் நிதானம் தேவை. பொறுமையைக் கடைப்பிடிக்கணுங்க. புதிய தொழில் முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது. வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும். இருப்பினும் முன்னேற்றமான பல செயல்கள் உண்டு.

விருச்சிகம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கடின முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வரும். இருப்பினும் வெற்றிகரமாக இவர்களை சமாளித்து முன்னேறுவீங்க. குடும்பத்துல  உள்ள பெரியவங்களோட ஒற்றுமை நல்லா இருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் சக்ஸஸ் ஆகும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவங்களுக்கு நல்ல செய்திகள் வரும்.இத்தனை காலம் ஒங்களை வாட்டிக்கிட்டிருந்த பிரச்னைங்க எல்லாம் ஒவ்வொண்ணா விலகி நிம்மதியா.. ஹாப்பியா ஆயிடுவீங்க. மாணவர்களின் கல்விநிலை நல்லா இருக்கும். பேரன்ட்ஸ்க்குக் கல்விச் செலவுகள் கூடுதலாக வாய்ப்பு உண்டு பத்திரிக்கை துறை போன்றவற்றில் உள்ளவங்களுக்கு முன்னேற்றமான வாரம் இது. லேடீஸ்க்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

தனுசு

பெண்களுக்கு ஒரு மிகச் சிறந்த வாரங்க இது. உங்க ஃப்ரெண்ட்ஸ் மற்றும் அலுவலக சகாக்களோட ஒற்றுமை நல்லா இருக்கும் திருமணம் மாதிரியான சுபகாரிய முயற்சிகள்ல நல்லபடியா முன்னேற்றம் ஏற்பட்டுக்கிட்டே போகும்.  வீட்டுக்குத் தேவையான புதிய சாதனங்கள் வாங்குவீங்க ஒரு சிலருக்கு மொபைல் போன்… லாப் டாப் போன்றவை வாங்க வாய்ப்பு இருக்குங்க. உத்தியோகத்தில உள்ளவங்களுக்கு உத்தியோக உயர்வு ஸாலரி உயர்வு போன்றவற்றிற்கான தகவல்ஸ் மெயிலில் வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் மெதுமெதுவா சக்ஸஸ் வரும். எதுவுமே ஸ்லோவாத்தான் நடக்கும். பேசும்போது ரொம்ப ரொம்ப கேர்ஃபுல்லா இருங்க.  ஃபாரின்ல வசிக்கறவங்களுக்கு பிரயாணங்கள் ஏற்பட சான்ஸ் உண்டு. இவற்றால் நன்மையும் ஷ்யூரா உண்டாகும். பட்.. எதிர்பாராத அபரிமித லாபம்லாம் எதிர்பார்க்க முடியாதுங்க.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 12 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மகரம்

குழந்தைங்களால சந்தோஷம் கெடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை சூப்பரா இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நல்லா இருக்கணும்னா நீங்க கொஞ்சம் கவனமாப் பேச ஆரம்பிக்கணும். இத்தனை காலமாய் வார்த்தைங்களை விட்டுக்கிட்டிருந்த மாதிரி இனியும் பேச முடியாது. பேசக் கூடாதுங்க. குடும்பத்தில் உள்ள மூத்தவங்களோட முயற்சியால அமைதி தவழும். வயசானவங்க கிட்ட நல்லவிதமாப் பழகி ஆசீர்வாதம் வாங்குவீங்க என்பதால் சுமுகமான உறவு நிலை நீடிக்கும். நீண்ட fலமா எதிர்பார்த்துக்கிட்டிருந்த காரியங்கள் கைகூடி வரும். சொந்த பிசினஸ் செய்யறவங்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்துக்கிட்டிருந்தாலும்கூட அவைகளில் வெற்றி காண்பீர்கள். உடல் நலம் நல்லா இருந்துக்கிட்டிருக்கும். கணவன் மனைவி உறவு நிலை அன்னியோனியமாக இருக்கும் சமுதாயத்திலும் குடும்பத்திலும் உங்க பேச்சிற்கு மரியாதை உண்டாகும்

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 14 வரை சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

கும்பம்

முன்பு பேச்சினால் ஏற்பட்டிருந்த பிராப்ளம்ஸ் தீரும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்துக்கிட்டி ருந்தவங்களுக்கு நல்ல நியூஸெல்லாம் வந்து சேரும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட கேஸ்களில் ஈடுபட்டிருந்தவங்களுக்கு வெற்றி உண்டாகும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை ஆசையா எதிர்பாத்துக் காத்துக்கிட்டிருந்தவங்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். உடன்பிறப்புகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும் வாரம். நீண்டநாள் ஆசை நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். இந்த வாரம் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. மேரேஜ் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ரிலேடிவ்ஸ்ஸூம், நண்பர்களும் தக்க சமயத்தில் ஆதரவா இருப்பார்கள்.  நீங்க அளவுக்கு அதிகமாக ஆசைப்படாம இருந்துக்கிட்டிருந்தா இந்த வீக் சூப்பரா இருக்கும்.

மீனம்

சொத்து சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு செலவு குறையும். இடமாற்றம் உண்டாகலாம் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவங்களுக்கு வெற்றி உண்டாகும்.  திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதுக்காக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி தேவைப்படலாம். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் வாரம். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீங்க. வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை அகலும். உங்க அப்பா, உங்க குழந்தைங்க,  உங்க கணவர்/ மனைவி ஆகியோருக்கு நல்ல நியூஸ் வரும்.