மேஷம்
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காணாமல் போயிடுங்க. வெளிநாடு வேலைக்கு முயற்சி பண்ணினீங்களே. சக்ஸஸ். மகன் அல்லது மகளுக்குத் திருமணம் நடைபெறும், அவங்களுக்குப் பாப்பா பிறக்க வாய்ப்புள்ளது. அரசு வேலைக்கு முயற்சி பண்ணுங்க. கிடைக்கும். நல்லதே நடக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. நல்லவங்களைக் கலந்தாலோசிச்சு டிஸைட் பண்ணி சீக்கிரம் ஸ்டார்ட் செய்ங்கப்பா. நீங்க புத்திசாலிகள் என்பதால் பிரச்சினைக்குள் போய்ச் சிக்கிக்கொள்ள மாட்டீங்க. நல்ல வேலைவாய்ப்பபு கிடைக்கும். வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறும்..
சந்திராஷ்டமம் :10.4.2020 முதல் 12.4.2020 வரை
ரிஷபம்
மேரேஜ் ஆகி பாப்பாவுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கறவங்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். கைவசம் பணப்புழக்கம் அதிகமாகும். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். அதிக வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் பொழுது போக்கு அம்சங்களை கொஞ்சம் தியாகம் பண்ணுங்க. கவலையைவிடுங்கப்பா. நல்லதே நடக்கும். அலுவலகத்தில் உங்களை அடிச்சுக் கேட்டால்கூட யாரைப் பற்றியும் கோள் எதுவும் சொல்லாதீங்கம்மா. உங்கள் மனதில் நீங்கள் எவ்வளவு அன்பானவர் என்று உங்களுக்கே தெரியும் அதை மற்றவர்களும் புரிஞ்சிக்கிற மாதிரி வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்தினால் என்னங்க?
மிதுனம்
உங்களுக்கு சின்ன பயம் இருந்தாலும் தைரியத்தோடு எதையும் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு அற்புதமான வாரம் இது. நன்றாக படித்து தேர்வுகளை எழுதுவீர்கள். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக போங்க. ப்ளீஸ் நல்லதே நடக்கும். டவுட் வேணாம். இந்த வாரம் கூடுமானவரை இடம் மாற்றம் எதுவும் வேண்டாம்ங்க. புதிய தொழில் செய்வதானால் மிகவும் கேர்ஃபுல்லா இருங்க கணவன் மனைவி உறவில் சந்தோஷங்கள் அதிகமாகும். அப்பப்ப சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் டோன்ட் ஒர்ரி. உடனுக்குடன் சரியாகி, சமாதானமாகி உங்களுக்கிடையே உள்ள நெருக்கம் அதிகமாக்கும். பேச்சில் கவனமாக இருங்க. பகலில் பக்கம் பார்த்து பேசுங்க இரவில் அதுவும் பேச வேண்டாம். சுருங்கச் சொன்னால் யார் கிட்டயும் எதுவும் வம்பு வெச்சுக்க வேணாம்.
கடகம்
ரொம்ப மன நிறைவோடு இருப்பீங்க. அரசு தேர்வுகள் எழுதலாம். உங்கள் வீட்டில் நெருங்கிய உறவினர் ஒருவர் நிறைய லாபத்தைப் பெற்றுத் தருவார். இந்த வாரத்தில் அதிர்ஷ்டம் அதிகமாகும். உறவினர் களுடன் அல்லது மிக நெருங்கிய நண்பர்களுடன் இன்பச்சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. திருமண வாய்ப்பு உறுதியாகும். எனவே மனதுக்கு நெருக்கமானவருடன் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. மனோதிடம் மிக்கவர்கள் என்று மற்றவர்கள் உங்களைப் பாராட்டுவதற்குப் பொருத்தமாகத்தான் நடந்து கொள்வீங்க. பட்.. உள்ளுக்குள்ள பயந்துகிட்டிருப்பது உங்களுக்குத்தானே தெரியும். மெல்ல மெல்ல உங்களின் கஷ்டங்கள் விடுபடுகிறது. பிலீவ் மீ. மாணவர்களுக்குப் பழைய பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.
சிம்மம்
உங்களுக்கு எந்த வயசானாலும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டி வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். எனவே அதில் டயர்ட் ஆக மாட்டீங்க. இத்தனைகாலம் இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். புதிய வீடு பொலிவுடன் ரெடியாகும். நண்பர்களையும் உறவினர்களையும் அழைச்சு விருந்து தருவீங்க. குடும்பத்தில் உள்ள பெரியவங்களை நல்லமுறையில் நடத்தி நல்ல பெயர் எடுப்பதோடு ஆசீர்வாதமும் கிடைக்குங்க. பாக்கெட் காலியாகும் காலம் இது ஏற்கனவே ரொம்ப நாளாய் அப்படித்தான் இருந்துக்கிட்டிருக்கு மேடம் என்கிறீர்களா. சரியாகும். இதோ சரியாகிவிடும்.
கன்னி
உறவினர்களால் பொருள் வரவு அல்லது ஹெல்ப் கிடைக்கும். தங்க நகைகள் வாங்குவீங்க. குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும். ஏற்படாமலேயே காப்பது உங்க சாமர்த்தியம். கண்,பல்,சார்ந்த பிரச்சினைகள் வந்தாலும் தகுந்த ட்ரீட்மென்ட் எடுத்து சரியாகிவிடும். டென்ஷனை குறைங்கப்பா. எதுக்காகத்தேவையே இல்லாமல் குரலை உயர்த்தறீங்க. ப்ளீஸ் இந்த வாரம் யார்கிட்டயும் வாக்குவாதமே செய்யாதீங்க. அதுகூடப் பரவாயில்லை.. உங்க பெருமையைப் பேசாதீங்க, கெளரவம் பார்க்காதீங்க. மத்தவங்களையும் கொஞ்சம் மதிச்சு நடங்க. குடும்பத்தில் அனுசரித்து போங்க. எஸ்பெஷலி ஆண்கள்.. எப்பவும் புலம்பாதீங்க. பெண்களே.. உங்க பக்கம் நியாயம் இருக்கும் என்றால் நீங்க எதுக்கும்.. யாருக்கும் பயப்படாதீங்க.
துலாம்
ஆசிரியர் தொழில்ல உள்ளவங்க தவிர மற்றவங்க உங்க பேச்சில கவனமாக இருக்கணும். எதிர்பாலினத்த வர் விஷயத்தில் நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேணுங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கப்பா. ரிஸ்க்கியான மற்றும் தப்பு வழிக்குத் தூண்டும் நட்புகளை தவிர்த்து விடுங்கள். மது, போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட வேண்டாம். ஒரு நிமிடத்தில் கெட்ட பழக்கம் உள்ளே புகுந்துவிடும். பிறகு துரத்துவது இம்பாஸிபிள். உங்களுக்காகவோ மற்ற யாருக்கோ கடன் வாங்காதீங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க. பயணங்களில் வெற்றி கிடைக்கும். எஸ்பெஷலி அலுவலக சம்பந்தமான டூர்களில். திருமணம் நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
விருச்சிகம்
பெண்களுக்கு இதுநாள் வரை திருமணம் தட்டிப்போனதல்லவா? இனி மனசுக்குப் பிடித்த வரன் அமையும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க.. அதனால அரை அடி குறைஞ்சு போயிட மாட்டீங்க. நல்லதே நடக்கும். உங்க தொழிலில் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. அது போதும். இந்தப் பிரச்சினை பர்மனென்ட் இல்லைன்னும் புரியும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. சற்றே முயற்சி எடுத்தால் போதும். சூப்பரா எக்ஸாம் எழுதுவீங்க. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். மன அமைதிக்காக சுற்றுலா போவீங்க. போன இடத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். அவங்ககூட இருந்த சண்டையெல்லாம் முடிஞ்சுடும்.
தனுசு
விவேகம் மிக்க செயல்கள் செய்வீங்க. சமூகத்தில் உங்கள் புகழ் இன்கிரீஸ் ஆவதற்கு வாய்ப்பும் சந்தர்ப்ப மும் அமையும். இதுவரை இருந்த வந்த கவலை தீரும். புது வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பிசினஸ் அல்லது ஜாப் தொடரும். இதுவரை தேவையற்ற அதிருஷ்டத்தை எதிர்பார்த்தீங்க. அதனால் உழைப்பு கேற்ற பலன் இல்லாமல் இருந்தது. எக்காரியத்திலும் தடையும் தள்ளிபோடும் நிலையும் உருவாகி இருந்தது. அதெல்லாம் இனி மாறியாச்சுங்க. இவ்ளோ காலமாய்க் காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தது. திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டம் இருக்கும். பொறுமை. பொறுமை. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சந்திராஷ்டம தினங்களில் ஜாக்கிரதையா இருங்க.
மகரம்
வீட்டில் இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் நடக்கும். குறிப்பாய் உங்க சகோதர சகோதரிங்களுக்கு நடக்காமல் தள்ளிப் போய்க்கிட்டிருந்த திருமணம் அல்லது குழந்தைப் பேறு நடக்கப்போகுது என்ற தகவல் உறுதியாகும். இதுவரை தேகத்தில் இருந்த மந்த நிலை அல்லது சோம்பல் நிலை காணாமல் போயிடும். சுறுசுறுப்பும் வேகமும் உடம்புக்குள் புகுந்து கொள்ளும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு வந்து.. நல்ல வேளையாய் வெள்ளைக் கொடி பறக்க விட்டு சமாதானம் ஆயிடுவீங்க. தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசி உங்க பார்ட்னரை ஹர்ட் செய்யாதீங்க . ஒரு விஷயம் நல்லா நினைவு வெச்சுக்குங்க. அநாவசியமா மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் தலையிட அனுமதிக்கவே செய்யாதீங்க.
கும்பம்
காதல் விஷயங்கள் ரொம்பவே ஹாப்பியா அமையும். இதுவரை ஃபேமிலியில் தள்ளிப்போன சுபகாரியங் கள் சுபநிகழ்ச்சிகள் நல்லபடியா நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவங்களுக்குத் தொட்டில் வாங்கும் செலவு வரும். நாலா வழிகளிலும் இன்கம் வரும்.எனவே செலவு பற்றிய பயம் இருக்காது. முன் எப்போதோ கொடுத்து மறந்த போயிருந்த கடன் வசூலாகும். நீங்க எந்த வகையிலும் எதிர்பார்க்காமல் இருந்த தொகைகள் வந்து சேரும். வேலையில் அதிக முன்னேற்றம் அமையும். சுய தொழில்கள் செய்துக்கிட்டிருந்தவங்களுக்கு நன்மை ஏற்படும். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன் தரும். அதுல ஓரளவு இன்வெஸ்ட்மென்ட் செய்ய இது உகந்த நேரம். நல்ல லாபம் வரும். ஆனால் பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து எதையும் செய்துடாதீங்க.
சந்திராஷ்டமம் :6.4.2020 முதல் 8.4.2020 வரை
மீனம்
நீங்க ஸ்டூடன்ட்டா.. எனில் தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பை ஒழுங்காக படித்தால் லட்டு மாதிரி மார்க் கிடைக்கும். யார் கண்டது மேடை ஏறிப் பரிசு வாங்கி.. பள்ளி.. கல்லூரியில்.. ஏன் மாநிலத்திலேயே முதல்வராகத் தேறவும் வாய்ப்பு இருக்குங்க. கல்வி கடன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க அதிகக் கஷ்டப்பட மாட்டீங்க. வெளிநாட்டு யூனிவர்சிட்டிகளில் முயற்சி செய்யறீங்களா? நல்லபடியாக்கிடைக்கும். நண்பர்/ சிநேகிதி ஒருவருடன்… அல்லது காதலன்/ காதலியுடன் ஏற்பட்டிந்த சண்டை ஒன்று அசட்டுச் சிரிப்புடன் சரியாகி இப்போத ஜாலியாப் பேச ஆரம்பிப்பீங்க. மிஸ்டேக் உங்க பேர்லதானே? நீங்கதானே வம்பு செய்து சண்டை போட்டீங்க. எனில் நீங்கதான் காலில் விழுந்து ஸாரி சொல்லணும். சொல்லுங்க.
சந்திராஷ்டமம் :8.4.2020 முதல் 10.4.2020 வரை