வார ராசிபலன்: 27.03.2020 முதல் 2.04.2020 வரை!  வேதா கோபாலன்

Must read

மேஷம்

மனசுல தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீங்க. உங்க மீதுள்ள மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செல்வாக்குள்ள பலரும் உங்களைத் தேடி வருவாங்க. அடுத்தவங்களுக்காக  ஹெல்ப் செய்வதில் உற்சாகம் உண்டாகும். பர்சனல் விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது  அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்க்கணுங்க. குடும்ப ஹெல்த் பற்றி கவனம்  தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த யுத்தம் நிற்கும். விருந்து நிகழ்ச்சிகள் ஏமாற்றம் அளிக்கும். உறவினரிடைய மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு.  எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்குமுங்க.   

ரிஷபம்

பயணம் செய்யும் போது கவனம் தேவைங்க. சொன்ன சொல்லைக் காப்பாற்றப் பாடுபட்டு நல்ல பெயர் எடுத்துடுவீங்க. மாணவங்க படிப்பில் கவனம் செலுத்துவீங்க. நண்பர்களின் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக  ஈடுபடுவீங்க. அதில் ஓரளவுதான் வெற்றிகிடைக்கும்.  அலுவலகவாசிகள் வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பீங்க. பணவரவு திருப்தி தரும். குடும்பத்தினருடன் கோபப்படாமல் நிதானமாகப்பேசி அனுசரித்துச் செல்வது நல்லது. அவங்க பக்கம்தான் நியாயம் இருக்கும். சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். வாகனத்தை கவனமாக ஓட்டுங்க.

மிதுனம்

கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் ஒரு வழியா முடிஞ்சுடும்.  பயணத்திட்டங்களைத் தள்ளிப்போடுவீங்க. அது நல்லதுக்குதாங்க. அரசியல் துறையினர் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாகப் பார்த்துக்குங்க. இந்த வாரம் வீண் தேவையே இல்லாத விஷயங்களில் வீண் குழப்பம் ஏற்படும். எதைப் பற்றியும்  அதிகம் யோசித்து மனசைக்  குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லதுங்க. பணவரவு இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். ரெடியா இருங்க. எங்கும் எதிலும கவனமாய்ச் செயல்படுங்க.

கடகம்

அடுத்தவங்களுக்காக உதவி செய்வது மற்றும்  அவங்களுக்காகப் பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கேர்ஃபுல்லா இருங்க. அதற்கான பாராட்டு எதையும் எதிர்பார்க்க வேண்டாம். பெண்கள் தங்களுக்கிட்ட வேலைகளைத் திறம்படச் செய்து முடித்து நல்ல பெயரும் பாராட்டும் பெறுவீங்க. தொலை தூர தகவல்கள் நிம்மதியளிக்கும்.  பயணம் செல்லும் தேதி கன்ஃபர்ம் ஆகும். மாணவர்களுக்கு மேல்படிப்பு பற்றி உறுதியாக முடிவாகும். கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது வெற்றிக்கு உதவும். கலைத்துறையினர் தடைநீங்கிப் புதிய வாய்ப்புகளைப் பெறுவீங்க. உறவினரிடம் நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். பொறுப்பு அதிகரிக்கும். சம்பளம் உயரச் சற்று பொறுங்க.

சிம்மம்

விருப்பத்திற்கு மாறா எதுவும் நடந்துடாதுங்க. பயப்படாதீங்க.  பகைவர்களை வென்று நிம்மதி பெறுவீங்க. எதிர்ப்புகள் அகலும். பணவரவு ஓரளவுதான் திருப்திகரமா இருக்கும். சிறிய பயணங்கள் ஓரளவு சாதகமான பலன் தரலாம். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் ஓரளவே இருக்கும். தொழில் தொடர்பான செலவும் கூடும். யாரிடமுமே வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கலைத்துறையினருக்கு, சென்ற ஆண்டைவிடவும் சிறப்பான வாரமா இருக்கும். தாமதமாகி வந்த மற்றும் தட்டிப்போன வாய்ப்புகள் அனைத்தும் திரும்பக் கிடைக்கும். துடிப்பும் தவிப்பும் இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான்.  பல்லைக் கடிச்சுக்கிட்டு கொஞ்சம் பொறுமையா இருந்துடுங்க. ப்ளீஸ்.

கன்னி

சமூகத்தில் உங்க  அந்தஸ்து உயரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். தந்தை வழியில் நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். அலுவலகத்தில் எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம்  உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் கிடைக்கும். மேலதிகாரிகளிடம்  வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அலுவலகவாசிகள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் ரகசியங்களையும் மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தருமுங்க. பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் உள்ளவங்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தாயார் பற்றிய டென்ஷன்கள் இருந்துக்கிட்டிருக்கும். ஆனால் பிரச்சனை பெரிதாகாதுங்க.

சந்திராஷ்டமம்: மார்ச் 26 முதல் மார்ச் 28 வரை

துலாம்

குடும்பத்தில் உள்ளவங்களால அதிகப்படி வருமானம் வரும். கணவன், மனைவிக்கிடையே நட்புணர்வு மிக்க உறவு  காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகப் பாடுபடுவீங்க. தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை. பெண்கள் காரியத் தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீங்க. வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். மாணவங்க அதிகம் கவலைப்படாமல் பாடங்களை  நன்கு படிப்பது நல்லது. விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள்  மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கைக் கைவிடுவது நல்லது. சிஸ்டர்ஸ்.. பிரதர்ஸ்.. இவங்க நன்மை செய்வாங்க. பதவி உயர்வதால் அலுவலகப் பொறுப்பு செமத்தியா அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 28 முதல் மார்ச் 30 வரை

விருச்சிகம்

அரசியல் துறையில் உள்ளவங்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும்.  நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். இந்த வாரம் செலவுகள் கூடும். அவற்றில் சுப செலவுகளும் உண்டு. எதையும் எதிர்த்து நிற்பதைத்  தவிர்த்து அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு லாபம் வரும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 30 முதல் ஏப்ரல் 2 வரை

தனுசு

தம்பதிகள் ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சுக்கிட்டுப் போறது நன்மை தருமுங்க. பெண்கள் சாதூர்யமாகப் பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க. பணவரவு கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவங்க கல்விக்குத் தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் போன்றவற்றை வாங்குவீங்க. கூடுதலாக நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். அதனால் என்ன? கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவங்க அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். ஆரோக்யத்தை மிகவும் கவனமாய்ப் பார்த்துக்குங்க.

மகரம்

குடும்பத்தில் இருக்கறவங்களோட செய்கைகள் உங்களது கோபத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தைக் கடைபிடிப்பது வீண் பிரச்னை ஏற்படாமல்  தடுக்கும். இந்த வாரம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும்,  நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீங்க. சிலருக்கு உங்கள் செல்வாக்கைக்  கண்டு பொறாமை உண்டாகலாம். கவனம் தேவை.   எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவங்க சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் நிதானப்போக்கு இருந்தாலும் நல்லபடியாக முடியும்.

கும்பம்

உத்தியோகத்தில் இருக்கறவங்க எதிர்பார்த்த பணவரவு கிடைக்கப் பெறுவீங்க.  மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் கணவன், மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதும் நல்லது. நீண்டகாலத்துக்குப் பிறகு மன நிறைவு காண்பீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்குப் பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியங்க, தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. பணவிவகாரங்கள் சற்று இழுபறியாகத்தான் இருக்கும். பலகாலம் காத்திருந்த வெளிநாட்டுப் பணம் வரும்.

மீனம்

குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும்  இருக்கும். உறவினருங்க, நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். ஹெல்த் மேம்படும். பயந்த விஷயங்களில் நிம்மதி பிறக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். தேவையே இல்லாத கவலை உண்டாகலாம்.  மனு செய்திருந்த உத்யோகம் கிடைத்துவிடும்.

More articles

Latest article