மேஷம்
உங்க கணவருக்கு / மனைவிக்கு நன்மைகள் சீக்கிரத்தில் வரும். கொஞ்சம் அவசரப்படாமல் இருங்க…ப்ளீஸ் வேலை மாறணும்னு ஆசைப்படறீங்க. அவ்வளவுதானே. முயற்சியை ஸ்பானர் போட்டு முடுக்கிவிடுங்க. ஆனாலும் அரச மரத்தை சுற்றிட்டு உடனே அடி வயிற்றை டெஸ்ட் பண்ணினால் பிள்ளை வருமா? அததுக்கு நேரம் வந்தால் எட்டுக்கால் பாய்ச்சலில் நன்மை வந்தடையும். வெளிநாட்டிலிருந்து வருமானம் விமானம் ஏறிப் பறந்து வர வாய்ப்பு அதிகம் உண்டு. . ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். சொத்து வாங்க செய்த முயற்சிகள் விருப்பப்படி நிறைவேறும். திருமணம் பற்றிய பேச்சுக்கள் நல்லபடியாக முடியும். உங்களுடைய வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து செய்ய முடியாமல் நீங்களே செய்ய வேண்டிய சூழ்நிலை அமையும்.வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மாணவர்கள் கல்வி உதவிப் பணம் கிடைக்க முயற்சி செய்யலாம். கூடிய விரைவில் பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஏற்கனவே உள்ளவற்றை விரைந்து முடிக்க வேண்டி வரும். கோயில்களுக்குப் போவீங்க. நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீங்க.சொத்து வாங்க செய்த முயற்சிகள் விருப்பப்படி நிறைவேறும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் குறையும். வெரி மச்.
ரிஷபம்
வீட்டில் இத்தனை காலம் தடைப்பட்டுக் கொண்டு வந்த நல்ல காரியங்கள் நடக்க பிள்ளையால் சுழி போடப்படும். பணம் வரும். புண்ணிய காரியங்கள் மற்றும் தர்ம காரியங்கள் செய்வீங்க. குடும்பத்தில் மனக் கசப்புக்கள் அகலும்.நல்ல காரணங்களுக்காப் பணம் செலவழியும். வாழ்க்கைத் துணையில் உடல் நலனில் சிறு பிரச்சினை ஏற்பட்டு சரியான சிகிச்சைக்குப் பிறகு குணமாகும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், ஆனால் அவர்களிடம் எச்சரிக்கை யாக இருந்தால் நல்லது. புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. சற்று வேகமாக நிகழ்ச்சிகள் நடந்தேறும்.நண்பர்கள் மத்தியில் பெருமை அதிகரிக் கும். சிறிய அளவில் உடல் நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வதில் முனைப்புடன் ஈடுபடுவீங்க. கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும்.நல்ல நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். சத்துள்ள உணவு சாப்பிடுங்க. உங்கள் உடல் நலம் குறித்து சற்று அதிகப்படி அக்கறை காட்டியாக வேண்டும் செலவினங்கள் குறையும். லாபங்கள் அதிகரிக்கும். நீங்க நினைத்த காரியங்கள் நடைபெறும். ஆனால் அதனால் அலைச்சல் இருக்கும். பெண்களால் பண உதவி கிடைக்கும். உறவினர்கள் ஊரிலிருந்து வருவாங்க. கணவர்/ மனைவிக்கு மனதில் நம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். தட்ஸ் நைஸ்
மிதுனம்
எதை எடுத்தாலும் தடங்குதேன்னு தலையில் கையை வெச்சுக்கிட்டு உட்கார்ந்துடாதீங்க. சாத்தியமான விஷயங்களை முயற்சி செய்யுங்க. மகள் மகன் வழியில் நன்மைகளும் மகிழ்ச்சியும் உணடுன்னா கட்டாயமாக உண்டுங்க .இத்தனை காலம் இருந்து வந்த வசதியான வீட்டையும் அலுவலகத்தையும் விட்டு, சற்று வசதிக்குறைவான இடத்தில் இருக்க நேரலாம். உறவினர்களுக்காக அலைந்து திரிந்து உதவ வேண்டியிருக்கும்.செலவினங்கள் வந்து கொண்டே இருக்கும். மாணவர்களுக்கு மதிப்பெண்களும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நன்கு படிக்கும் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத பண வரவு சிறிதளவு உண்டு. எழுத்துத் துறையைச் சேர்ந்தவர்களின் படைப்புகள் அங்கீகரிக்கப்படும். நெருங்கிய உறவினருடன் போக்கு வரத்து அதிகரிக்கும். பெற்றோரிடமிருந்து நன்மைகளை எதிர்பார்க்கலாம். தொழிலிலும் அலுவலகத்திலும் லாபம் நிச்சயம் கிடைக்கும். பெரிய அளவில் போட்டிருந்த திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வது நல்லது. அதிகமாகக் காலம் கடத்த வேண்டாம். பெண்களுக்கு சிநேகிதியுடன் மகிழ்ச்சியாகப் பொழுது கழியும். தட்ஸ் வாவ்.
கடகம்
வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகள் நடக்கும். அலுவலகம் சம்பந்தமான சில சாதனைகளை செய்து முடிப்பீங்களே! தந்தையால் உங்களுக்கு நன்மைகளும் மகிழ்ச்சியும் குதித்துக்கொண்டு ஓடி வரும்.விருதுகளும் பரிசுகளும் கிடைக்கும். ற்றையோருக்கும் நிலம் வீடு போன்றவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நம்பிக்கையோடு வலது காலை எடுத்து வையுங்க. வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். நீங்க செய்த, செய்துக்கிட்டு இருக்கற புண்ணிய காரியமெல்லாம் உங்களுக்கு ரிசல்ட் கொடுக்கக் காத்துக்கிட்டு இருக்கும்போது என்ன கவலை? ஆனாலும் ஒரே ஒரு வேண்டுகோள். உங்களுக்கு நல்ல அட்வைஸ் குடுக்கறவங்களை அலட்சியம் செய்யாமல் மதிச்சுக் காதைக் குடுங்க. அலுவலகத்தில பல காலமாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் யாராலும் செய்ய முடியாதவற்றை சாதித்துப் பாராட்டுப் பெறுவீங்க.மகன் அல்லது மகளின் வாழ்வில் முன்னேற்றம் தென்படும். பலவிதமான மகிழ்ச்சியான செய்திகள் உங்களை நோக்கி வந்து கொண்டே இருக்கும். சிறப்பாக எதையும் எதிர் பார்க்க வேண்டாம். நிறையச் செலவுகள் இருக்கும். இன்முகமான சூழல் நிலவும்.கணவருக்கு / மனைவிக்கு அலுவலகத்தில் நன்மைகள் அதிகரிப்பதற்கான தகவல்கள் வரும். குட் நியூஸ். நோ?
சிம்மம்
தற்போது குரு பகவான் ஒன்பதாம் வீட்டை அழகாய்ப்பார்க்கிறார் அல்லவா! இதனநால் அப்பாவுக்கு திடீர் நன்மைகள் நிகழும்.ஊருக்குப் போறதுக்கு எல்லாம் பேக் பண்ணியாச்சா? நினைவு வெச்சுக்குங்க. நிறைய நாள் கழித்துதான் திரும்பி வருவீங்க. பாப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் உடனே 50 டிகிரி கோணத்தில் தலையை உயர்த்தி சாமியைத் திட்ட வேண்டாம். நீங்க திட்டி முடிக்குமுன் குழந்தை உங்க மொபைலைப் பிடுங்கி பைக் ரேஸ் விளையாட ஆரம்பிச்சுடும். அப்புறம் அசடு வழிய வேண்டாம். சிலர் உத்யோகமே மாறக்கூடும். நீங்க ஐ டி துறையில் இருக்கறவரா? எதிர்பாராத நன்மைகளை எதிர்பாருங்க. நண்பர்களால் பல வகை நன்மைகள் கிடைக்கப்போகுது. கடன் வாங்கறதைக் கொஞ்சம் நிறுத்துங்க. கூகிளில் திருமண இன்விடேஷனுக்கு டிசைன் தேட வேண்டிய நேரம் வந்தாச்சு. ரொம்பவும் ரொமான்டிக்காய்ப் பொழுது போகும். நண்பர்களா அவங்க? ஒவ்வொருத்தரும் காமதேனு கற்பகத் தரு. நண்பேங்க! சிறிதும் பெரிதும் உள்ளூரும் வெளியூருமாக நிறையப் பயணம் போவீங்க. ஆரோக்யம் ஆரோக்யம்னு ஒண்ணு இருக்கறதை மறந்துடாதீங்க. முதலில் ஒழுங்காய் வேளாவேளைக்கு சாப்பிடுங்க. பிற பிறகு!. உங்கள் கெளரவம் அதிகரிக்கும். உங்கள் பேச்சை மதிச்சு ஏற்க நிறையப் பேர் தயாராக இருப்பாங்க. ஹாப்பி?
கன்னி
குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு கிலுகிலுப்பை வாங்கும் வேளை வந்துவிட்டது. அது தவிர மற்றொன்றும் உண்டுங்க! நிறையக் கோயில்களுக்கு நீங்க செல்லப்போறீங்க! கொஞ்சமாக நஞ்சமா? எத்தனையோ மாதங்களாக..ஏன்.. கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே நீங்க கிடப்பில் போட்டிருந்த பிரார்த்தனைப் பட்டியலை எடுத்துத் தூசி தட்டி நிறைவேத்துவீங்க. நடக்கட்டும்! என்ன ஒரு ஆத்ம திருப்தி! என்ன ஒரு சந்தோஷம்! தேங்கியிருந்த வழக்குகள் நல்ல விதமாகவும் உங்களுக்கு சாதகமான முறையிலும் தீர்ப்புக் கிடைக்கும். திருமண முயற்சிகள் மெல்லப் பலன்தர ஆரமபிக்கும். உத்யோகம் மற்றும் கல்வி சம்பந்தமான முயற்சிகளுக்கான நல்ல பலன்கள் ஏற்படும். உடலும் வயதும் இடம் கொடுத்தால் ரத்த தானம் செய்யலாமே.ஆசிரியர்களுக்கும் உங்களின் வழி காட்டிகளுக்கும் மரியாதை செய்யுங்க. நீங்க மனதில் திட்டம் போட்டிருந்த நிகழ்ச்சி நிரல் மாறி நீங்க செய்ய வேண்டும் என்று நினைத்த காரியங்களை முடிக்க முடியாமலும் போகலாம். எதிர்பாராத செயல்களில் ஈடுபட வேண்டியும் இருக்கலாம். உங்கள் திறமைகளுக்கு நிறைய மரியாதை கிடைக்கும். உங்கள் அருமை எல்லோருக்கும் தெரியவரும். வில் பிகம் ஃபேமஸ்.
துலாம்
வீடு வாங்கலாம், விற்கலாம். லாபம் வரும். உழைப்பினால் நன்மைகளைக் காணப்போறீங்க. உடல் நிலையில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் நல்லபடியாக சரியாகும். வெளிநாட்டிலிருந்து பரிசுகள் அல்லது அன்பளிப்பு அல்லது பண வரவு வரும். நல்ல வகையில் பணம் செலவழியும். பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபட முடியாது. நண்பர்கள் சந்திப்பு உண்டு. வீட்டில் புதிதாய் ஒரு கட்டில் அல்லது தொட்டில் தயார் செய்ய வேண்டி வரும். மம்மிக்கு சின்ன பிரச்சனைன்னாலும் உடனே கவனியுங்க. அவங்க சொல்றதுக்கு முன்னாடி வண்டியில் உட்கார வெச்சு டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போயிடுங்க. ‘கவலைப்படறதுக்கு எதுவும் இல்ல. நல்ல வேளை சீக்கிரம் வந்துட்டீங்க’ ன்னு டாக்டர் சொல்லுவார். வீட்டில் மகிழ்ச்சியும் கலகலப்பும் கூடும்.உங்களோட கவர்ச்சி அம்சம் காரணமாக உங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். மகன்/ மகளால் ஏற்பட்டிருந்த மனக் கலக்கங்கள் தீர ஆரம்பிக்கும். ஓ.கே? முன்பு இருந்ததைக் காட்டிலும் நிதி நிலைமையும் பலப்படுவதால் மனதில் தெம்பும் உற்சாகமும் கூடுதலாகும்.. இதனால் மற்றவர் களுக்கு உதவும் மனப்பான்மை அதிகரிக்கும். யெஸ்,. ஹெல்பிங் டென்டன்ஸி.
விருச்சிகம்
சகோதரன் அல்லது சகோதரி காதலுக்காக நீங்க கொஞ்சம் மெனக்கெடுவீங்க. என்னே சகோதர பாசம். மம்மிக்கோ அல்லது டாடிக்கோ திடீர்னு பொன் மழை பெய்ய ஆரம்பிக்கும். விடாதீங்க. பாக்கெட் மனியை உசத்தும்படி நச்சரிங்க. நல்ல காரணத்துக்காகக் குடும்பத்தைப் பிரிய வேண்டி வரும். சந்தோஷமாய் டாட்டா சொல்வீங்க. வேலைக்காரர்களை மதித்துப் போற்றுங்கள். அவர்களால் நன்மையும் உண்டு. மேலதிகாரி கூப்பிடுவார். ‘இந்தா பிடி’ன்னு பொற்குவியல் தருவார். அள்ளிக்கிட்டு வாங்க. இதயத்தை யாருக்கோ இரவல் கொடுக்கப் போறீங்க. போச்சு உங்க தூக்கம். பை தி வே…உங்க கிட்ட உள்ள நியாயத்தையும் நேர்மையையும் மற்றவங்க கிட்ட எதிர்பாக்கவே பாக்காதீங்க. குடும்பத்தில் ஆரோக்யமும் மகிழ்ச்சியும் இணக்கமான சூழலும் நிலவும். குழந்தைகள் வாழ்வில் மகிழ்ச்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்படும். வாழ்க்கை வசதிகள் பெருகும். எழுது பொருள் வியாபாரம் செய்வோர் ,புத்தக வியாபாரிகள் ஆகியோருக்கு நல்ல லாபங்கள் வரும்.சிரமங்களிலிருந்து நல்ல முறையில் விடுபட்டுவிட்டீர்கள். அலுவலகத்திலும், வீட்டிலும், அக்கம்பக்கத்திலும் எல்லோரும் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்கக் காத்திருப்பாங்க. நண்பர்கள்வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீங்க. ஹாப்பி அக்கேஷன்ஸ்.
தனுசு
செய்யற கடமையை முழு வீச்சில் மன சாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்துகிட்டு இருக்கீங்க. எல்லாம் சரியான திசையில் டாப் கியரில் போயிக் கிட்டிருக்கு. கவலையே வேண்டாம். நினைச்சதெல்லாம் நடக்குமுங்க. நகை நட்டுன்னு சேரும். நிறைய ஊர் சுத்தி சந்தோஷத்தையும் அனுபவத்தையும் சேர்த்துப்பீங்க. சோம்பல் காரணமாகவோ உடல் நிலை காரணமாகவே சில வேலைகளை வேறு வழியின்றித் தள்ளிப் போடுவீங்க. கவலைப்படாதீங்க. சுதாரிச்சுக்க அவகாசம் குடுக்காமல் திடுதிப்புன்னு அதிருஷ்டம் காலிங் பெல் அடிக்கும். வாசக்கதவை ராசலட்சுமி தட்டுகிற நேரத்தில் நித்ராதேவியோட சாட் பண்ணப் போயிடாதீங்க. அரசியல் ஈடுபாடு உள்ளவர்னா எங்கும் எதிலும் கவனமாய் இருக்கணுங்க. பிரசாரத்திற்குப் பொது மக்கள் கைதட்டுவது போல் மேலிடமும் கைதட்டணும்னு எதிர்பார்த்தால் எப்பிடி! அலுவலகவாசிகளுக்கு நன்மை அதிகரிக்கும். உத்யோகம் சம்பளம் இரண்டும் உயரவும் வாய்ப்பு உள்ளது. மனைவியாலும் மனைவி வழி உறவினர்களாலும் லாபமும் நன்மையும் உண்டாகும். தொடர்ந்து நல்ல பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதை நினைவில் வெச்சுக்குங்க. அயராத உழைப்பினாலேயே பெரிய நன்மைகளைக் காணப்போகிறிர்கள். குட் திங்.
மகரம்
வீடு மனைகளினால் ஆதாயம் ஏற்படும்.மிகவும் லாபமான காலம்.வெளி நாட்டில் வேலை கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீங்க. உங்கள் திறமை கவனிக்கப்படும்.புதிய வாகனம் /புதிய வீடு வாங்குவதற்கு ஏற்பாடு செய்வீங்க. எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் எதிர்பார்க்காதீர்கள். மனதில் குடும்பம் சம்பந்தமான சிறு சிறு குறைகள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல செய்தி உண்டு. பெண்கள் உத்யோகத்தில் மிக நல்ல முறையில் முன்னேறுவாங்க. உழைப்பு எதுவும் வீணாகாது. பயணங்களால் லாபம் ,நன்மை ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். ஆரோக்யத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செல்லும். வங்கி சேமிப்பு குறையும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பு இருந்தாலும் மனசுக்குள் சிறு வருத்தம் ‘ஒன்றை மறைத்து வைத்து சிரமப்படுவீங்க. மஞ்சள் நிற இனிப்பை மற்றவர்களுக்குக் கொடுங்க. பொது விஷயங்களில் ஈடுபட வேண்டி வரும். மாணவர்கள் கவனம் சிதறாமல் சற்று சிரத்தையுடன் படித்தால் நல்ல மதிப்பெண்கள் வாங்கலாம். கணவன் மனைவிக்குள் மிகவும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுவதால் மனம் லேசாகும். அக்கம் பக்கத்தவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுதல் அவசியம். பேச்சால்/ செயலால் வம்பில் மா‘ட்ட வேண்டாம். ப்ளீஸ் டோன்ட்.
சந்திராஷ்டமம்: பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 28 வரை
கும்பம்
குடும்பத்தினருக்கு நீங்க உழைப்பதுபோல் அவங்களும்தான் உங்களுக்கு உதவறாங்க என்பதை நினைவில் கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களிலோ அல்லது பொருட்கள் பழுதாவதாலோ உங்களுக்குப் பிரச்சினைகளும் கோபமும் உண்டாகலாம். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.உடல் நிலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் மெல்ல மெல்ல சரியாக ஆரம்பிக்கும்.முடிந்தால் மனசிருந்தால் ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவி செய்யுங்க காதலர்களுக்கு இனிமையான வாரம். வருமானம் அதிகரிக்கும். பிரச்சினைகளை சமாளித்து நண்பர்களுக்கும் உறவினருக்கும் உதவுவதன் மூலம் உங்கள் வட்டாரத்தில் நல்ல பெயர் எடுப்பீங்க. கவர்ச்சி அம்சம் ஓங்குவதால் முகராசி உங்களைத் தேடி வரும். பயணத் தால் நன்மை உண்டு. பொழுது போக்கு அம்சங்கள் மனதைத் திசை திருப்புவதால் கடமைகளில் தேக்கம் ஏற்படலாம். ஓய்வு குறைய நேரிடும். உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்க செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சிரமங்களிலிருந்து நல்ல முறையில் விடுபட்டுவிட்டீங்க. பல காலம் நிறைவேறாத திட்டங்கள் நிறைவேறும். என்ஜாய்.
சந்திராஷ்டமம்: பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை
மீனம்
பொங்கிப் பெருகும் தன்னம்பிக்கை மட்டும் இல்லைன்னா உங்க கதி என்ன ஆகியிருக்கும். எனினும் இவங்களைத்தான்னு இல்லாமல் எல்லோரையும் நம்பறீங்களே அந்த ஒரு குணத்தை மட்டும் அழிப்பான் வெச்சு அழிச்சுடுங்களேன். வெளிநாடு பற்றிய சமாசாரம் எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். நீங்க அவசரப்பட்டாலும் அது பாட்டு ஆமைக்கும் நத்தைக்கும் துணை போகும். பெருமை அதிகரிக்கும். உடல் நலத்தில் இருந்து வந்த கோளாறுகள் விலகும். தொழிலிலும் அலுவலகத்திலும் லாபம் நிச்சயம். அதிருஷ்டப்பரிசு போன்ற விவகாரங்கள் மூலம் திடீரென்று பெரிய அளவில் பொருள் வரும் அல்லது அது பற்றிய தகவல் கிடைக்கும். வரவர உங்க விலாசம் எதுன்னு கேட்டால் ஏதாவது ஒரு கோயில் பெயரைச் சொல்ற அளவுக்குக் கோயில் விசிட் செய்ய ஆரம்பிச்சுட்டீங்க. நல்லதுதான். நிறுத்திடாதீங்க. ஒரு திருமண மண்டபத்திலிருந்தோ பிரசவ ஆஸ்பத்திரியிலிருந்தோ வீட்டிற்குள ஒரு புதிய நபர் வரவிருக்கிறார். குடும்பம் செழிக்க ஒரு பிள்ளையார் சுழி. குட் ஸ்டார்ட்.
சந்திராஷ்டமம்: மார்ச் 2 முதல் மார்ச் 4 வரை