மேஷம்

தொழில் துறையில் உங்களுக்குக் கலவையான பலன் கிடைக்கும். உங்க பணித்துறையில் சாதனை மற்றும் முன்னேற்றம் ஏற்படும் கடினமாக உழைப்பீங்க. சட்ட விரோதமான செயல்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். பொருளாதார வாழ்க்கை மகிழ்ச்சி தரும் வகையில் உதவும், ஆரோக்கியம் பாதிப்பிலிருந்து மீளும். உங்க செல்வமும் செலவாக்கும் கூடும். எதிர்காலத்திற்கான பணத்தை சேமிக்க சரியான ஐடியாவை யோசித்து அதில் வெற்றியடைவீங்க. உங்களைப் பற்றிய நல்லெண்ணத்தை மற்றவர்கள் மத்தியில் உருவாக்க முயற்சி செய்வீங்க. பிசினஸ் செய்வோருக்கு நிதி நன்மை கிடைக்கும், பணி  புரிவோரின் மனதில் நிலவும் உற்சாகம் அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். குடும்ப வாழ்கை சாதகமானதாக காணக்கூடும். உங்களில் ஒருசிலர் உங்க குடும்பத்திலிருந்து நல்ல காரணங்களுக்காக விலகிச் செல்ல வேண்டி இருக்கலாம்.

ரிஷபம்

உங்க குடும்பத்தின் உறுப்பினர்கள் உங்களுடைய எந்தவொரு முடிவுக்கு ஆதரவாக நிற்பதை காணலாம். திருமண வாழ்க்கையில் சந்தோஷ பலன் கிடைக்கும். உங்க வாழ்கை துணைவியுடன் இத்தனை காலம் இருந்து வந்த தகராறுகள் சரியாகும். உங்க உறவுக்காரர்களுக்கு விசுவாசமாக இருப்பீங்க, சவால்களை எதிர்கொண்டு வெற்றியடைவீங்க. நீங்க உங்க குழந்தைகள் பற்றிச் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும். பணித்துறையில் முன்னேற்றம் அடைவீங்க. உங்களுக்கு இடப்பட்ட ஒவ்வொரு வேலையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீங்க. நிதி நிலையைப் பொருத்தவரை நல்ல பலன்களைப் பெறுவீங்க. அனுபவமும் பயிற்சியும் அந்தந்தத் துறையில் உள்ள நிபுணர்களை மேலும் சிறப்படையச் செய்யும். தீங்கு நினைப்பவர்கள் என்று உணர்ந்தால் அவங்க கிட்டேயிருந்து முடிந்தவரை விலகியே இருங்கள்.

மிதுனம்

உங்களுக்குக் கடந்த வாரங்களில்  இருந்துவந்த சிக்கல்கள் தீர்ந்து நிம்மதி வரும். ஒரு பெண் சக ஊழியர் உதவிகரமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்க கோபத்தை நீங்க கட்டுப்படுத்த வேண்டும்.  கூடுதலாக சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் உங்க மரியாதை, புகழ் மற்றும் நற்பெயர் கூடும். அது உங்க புகழை மேம்படுத்தும். நீங்க முதலீடு செய்தால், அது எதிர்காலத்துக்கு நல்லது. உங்க கடின உழைப்பையும் முயற்சிகளையும் தொடருவீங்க. நீங்களே எக்ஸ்பெக்ட் செய்யாத ஒரு நல்ல விஷயம் திடீர்னு நடந்து முடிஞ்சு உங்களை வியப்பில் ஆழ்த்திடும்.  இந்த வயசில் உள்ள மற்றவங்களைவிட நீங்க இப்போ அதிக பக்குவமும் அனுபவமும் பெற்று எல்லோரையும் அசத்திடுவீங்க. அருகில் உள்ளவங்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய வாரம். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிக்க இயலாது. தேக ஆரோக்கியத்திற்காக செலவிடுவீர்கள்

கடகம்

விரைவாகச் சம்பாதிப்பதற்கு எந்த குறுக்குவழியையும் பயன்படுத்த வேண்டாம், கவனமாக இருந்தால் சிக்கலில் மாட்டாமல் இருப்பீங்க. குடும்ப சூழ்நிலை உங்களுக்குச் சாதகமாக இருக்க கூடும், இதனால் உங்க குணத்தில் முன்னேற்றமான மாற்றம் காணக்கூடும். உங்க கோபத்தை அடக்கி வைத்திப்பீங்க. ஒவ்வொரு சர்ச்சையிலிருந்தும் விலகி இருந்து நன்மை காண்பீங்க. வாரத் தொடக்கத்தில் இருக்கக்கூடிய பொருளாதார ரீதியான பாதிப்புகள், சிக்கல்கள் நீங்கி, போகப் போகப் பண வரவு சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய திறளையும் கைக்கொள்வீங்க. உடன் இருப்பவர்களால் அனுகூலமான பலனை அடையக்கூடிய நிலையை எட்டுவீங்க.  குடும்பத்தில் சுப நிகழ்வுகள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில ஐடியாக்களைச் சொல்லி தருவார். தைரியமாக முடிவுகள் எடுக்கும் வாரம்.

சிம்மம்

வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிகொடுத்து வேலை வாங்குவீங்க. உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்து எறிவீங்க. மாறுபட்ட அணுகுமுறையால் சாதனை செய்வீங்க. குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீங்க. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீங்க. புது ஏஜென்சி எடுப்பீங்க. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீங்க. உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீங்க. புதுமை படைக்கும் எண்ணங்கள் வரும். இன்முகத்துடன் கூடிய பேச்சால் எல்லோரையும் கவருவீங்க. பிள்ளைகள் நம்பிக்கை தருவாங்க. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பாங்க. உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். உற்சாகமான மனநிலையுடன் வளைய வருவீங்க. வங்கி இருப்பு உயரும்.

கன்னி

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என திட்டமிட்டு அதில் வெல்வீங்க. வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். . உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். முனைந்து முயன்றால் நினைத்தவை நடக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். குடும்பத்தை பற்றிய கவலைகள் நீங்கும். பழைய கடன் பிரச்னை உங்க முயற்சியால் நீங்கும். உடல் நலம் மேம்படும். வாகனம் சற்று செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து வென்று மீளுவீங்க. பணியிடத்தில் பொறுப்புகள் கூடும். நிதானம் தேவைப்படும் இடத்தில் அதைச் சரியாகக் கடைப்பிடிப்பீங்க.

துலாம்

ஓரிரு செயல்களில், தடைகளை சந்தித்தாலும் முடிவில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வுகளில் எதிர்தபாராத வியப்பை அனுபவிப்பீங்க. தொழில் நன்றாக நடைபெற, ஓய்வின்றி உழைத்துப் பெரிய அளவில் நன்மை அடைவீங்க. கணவன்- மனைவிக்குள் பிரச்சினை வராமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வீங்க. குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீங்க. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த சாதனங்கள் வாங்குவீங்க. வேற்றுமதத்தரின்/ வேற்று மொழி பேசுபவர்களின் உதவி கிடைக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் இப்பொழுது உங்களை வந்து சந்தித்து நன்றியைச் செயலில் காண்பிப்பாங்க. வியாபாரத்தை பெருக்குவீங்க. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீங்க. எதிர்பாலினத்தவரின் கலகலப்பான செயல்களால் இனிமையான வாரமாக அமையும்.

விருச்சிகம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்க நலனில் அதிக அக்கறை காட்டுவாங்க. உங்களை தவறாக நினைத்து கொண்டிருந்தவர்களின் மனம் மாறும். பணியில் உள்ளோர் கடமையுணர்வுடன் செயல்படுவீங்க. உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பது மனதில் நிம்மதியை ஏற்படுத்தும். சிந்தனைத் திறன் பெருகும். கற்பனை சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பாங்க. உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் வழக்கத்தை விட்டு, அறிவுப்பூர்வமாகப் பேசுவீங்க. சுறுசுறுப்பாகச் செயல்படுவீங்க. திடீர் முடிவுகள் எடுப்பீங்க. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீங்க. விஐபிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையைக் கையாண்டு லாபம் பெறுவீங்க. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீங்க. மிகவும் முயன்று சாதிக்கும் வாரமாக அமையும்.

தனுசு

நீண்ட காலமாக நினைத்திருந்த விஷயம் ஒன்று, மிகுந்த முயற்சிக்குப் பின் சாதகமாக நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். தொழிலிலும் பணியிலும் புதிய முறைகளைப் புகுத்து வதற்கான வழிமுறைகளை கற்பீங்க. இது உங்க பணியிடத்தில் உங்களின் புகழையும் பெருமையையும் அதிகரிக்கும். செல்வாக்குக் கூடும். உங்களின் மென்மையான மற்றும் பணிவான நடவடிக்கைகளால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில விஷயங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்க அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வதால் உங்களைச் சரி செய்து கொண்டு வெற்றிப் பாதையில் அடிஎடுத்து வைப்பீங்க. வியாபாரத்தில் வசூல்  கடந்த வாரங்களை விடவும் சற்றே நன்றாக இருக்கும்.

மகரம்

வேலைச்சுமை ஓரளவு குறையும். கடினமாக உழைக்க வேண்டிய நிலை மாறும். உங்க செயல்களில் வெற்றியும், அதனால் பொருளாதார மேன்மையும் பெறுவீங்க. உத்தியோகஸ்தர்கள், மிகவும் முயன்று உழைப்பதால் உயர் அதிகாரிகளின் லேசான பாராட்டுக்களைப் பெறுவர். தொழிலில் உற்சாகமான சூழல் காணப்படும். குடும்பத்தில் பணத்தேவை அதிகரித்தாலும் அதை நல்ல முறையில் சமாளிப்பீங்க. மற்றவர்கள் உதவி நாடி வரும் வேளையில் கையிருப்பு சரியான நேரத்தில் கைகொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காண்பித்து நலமடைவீங்க. உத்தியோகஸ்தர்களுக்கு வந்துசேரும் இடமாற்றத்தை தவிர்க்க இயலாது. புதிய முயற்சியில் இறங்குவதை தள்ளிப் போடுங்கள். குடும்பத்தில் அமைதிக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 23 முதல் டிசம்பர் 26 வரை 

கும்பம்

முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது, தகுந்த நபர்கள் அல்லது அனுபவசாலிகளைக் கலந்து பேசுங்கள். பணத் தேவை இருந்தாலும், கடன் வாங்காமலேயே சமாளித்துவிடுவீங்க. பெண்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலவும். அது செயல்களில் வெளிப்பட்டுப் பாராட்டு வாங்கித் தரம். வயிறு சம்பந்தப்பட்ட தொல்லையை அலட்சியம் செய்ய வேண்டாம். புதிய விஷயங்களில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் இருங்கள். தெய்வ தரிசன வாய்ப்பு உருவாகும். பயணம் மேற்கொள்வீங்க. வாழ்க்கைத் துணையுடன் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வருவீங்க. உடன்பிறப்புகள் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும். தொழிலில் நினைத்த விஷயம் நிறைவேறி நிம்மதி காண்பீங்க. சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல மனிதர்களின் தலையீட்டால் அகலும். பொழுதுபோக்கு அம்சங்களைவிடக் கடமைகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.

 சந்திராஷ்டமம் : டிசம்பர் 26 முதல் டிசம்பர் 28 வரை 

மீனம்

முயற்சிகள் ஓரளவு கைகொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஒரு சிலருக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும். தொழில் புரி பவர்கள், இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீங்க. பழைய கடன் தொல்லை தரலாம். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். உடல்நலம் சீராகி மகிழ்ச்சிப்படுத்தும். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் முயற்சியில் சோர்வும் சோம்பலும் இல்லாமல் முன்னேறுங்கள். உடன்பிறப்புகளுக்கு மகிழ்ச்சியளிக்கும்படியான ஒரு சுபச்செய்தி வந்து சேரலாம். சான்றோர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் பொருத்தமாகக் கைகொடுக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். தாயாரின் உடல்நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயர்திகாரிகள் ஆதரிப்பாங்க. நிம்மதி உண்டாகும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 28 முதல் டிசம்பர் 30 வரை