வார ராசிபலன்: 1.7.2022 முதல் 7.7.2022 வரை! வேதாகோபாலன்

Must read

மேஷம்

‘செலவைக் கட்டுப்படுத்த வேண்டும்‘னு ஒரு பெரிய தாளில் ப்ரின்ட் அவுட் எடுத்து வெச்சுக் கண்ணில் தெரியும் இடத்தில பெரிசா மாட்டி வைத்து உற்றுப் பார்த்துக்கிட்டே இருங்க. சில செலவுகள் அத்தியாவசியமாகவும் எதிர்கால நன்மை கருதியும் இருக்கும்தான். இன்வெஸ்ட்கூடச் செய்வீங்க. பாஸ்போர்ட் விசா சம்பந்தமான செலவுகளாகவும் இருக்கும். செகலவுக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற லாபங்கள் சற்று நிதானமாகத்தான் வரும், பயம் வேணாம். கட்டாயமாக வரும். ஏராளமான நண்பர்கள் உங்களுக்குச் சேருவாங்க.  அவங்க கிட்ட சற்றே கவனமுடன் பழகினால் போதும்.  மனசுவிட்டுப் பேசறேன் பேர்வழி என்று சகலத்தையும் கவிழ்த்துக் கொட்டி வைக்காதீங்க. அப்புறம் ஏண்டா சொன்னோம்னு நீங்கதான் ஃபீல் செய்வீங்க.  பல நாளா டென்ஷன் குடுத்துக்கிட்டிருந்த விஷயம் பற்றி நிம்மதியான சொல்யூஷன் கெடைக்கும். அதை உங்க குடும்பத்துல உள்ள ஒருவர் பொறுப்பேற்றுச் செய்து வயிற்றில் பால் வார்ப்பார்.

ரிஷபம்

அடுத்தடுத்து வருமானமும் லாபங்களும் வரும். ரொம்ப காலம் காத்திருந்த தொகைகள் கைக்கு வரும். உங்களுக்குத் திரும்ப வர வேண்டிய அல்லது நீங்க திருப்ப வேண்டிய கடன்கள் கேட்டுக்கேட்டு ஓய்ந்த நிலையில் ஒரு முடிவுக்கு வரும்.  குழந்தைங்க உங்களை மனம் நோகப் பேசினாலும் சரி.. அவங்க செயல்கள் உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்தினாலும் சரி.. சற்றே பொறுமையை அணிந்து கொள்ள வேண்டும். சரியாகும். சரியாவாங்க.  மம்மி கிட்ட சண்டை போடாதீங்க, நல்ல வேளையாய்க் குடும்பம் ஜாலியா சந்தோஷமா இருக்கும். உங்களோட அணுகுமுறையில கொஞ்சமாச்சும் கவனம் தேவைங்க. ஒங்களுக்குப் பிரியமானவங்க கிட்டப் பேசும் போது கவனமாகப் பேசுங்கப்பா. முக்கியமான முடிவுகளை இந்த வீக் எடுக்கறதை அவாய்ட் செய்ய முடியும்னா பெட்டர். வேற வழியே இல்லைன்னா மட்டுமே செய்ங்க.

மிதுனம்

சகோதர சகோதரிகளுடன் சந்தோஷமாய்ப் பொழுது போகும். வெளியூர் அல்லது வெளிநாடு அவங்களோட போவீங்க… தனியாவும் போவீங்க…  டாடிக்கு நிறைய நன்மைகளும் சில பிரச்சினைகளும் ஏற்படும். பயப்படாதீங்க. சமாளிச்சுடுவாரு. அபரிமிதமாய் ஒரு கோவம் வருது பாருங்க. அதைக்கொஞ்சம் கட்டுப்படுத்திக்குங்க. குறிப்பா உங்க மேல பிரியம் வெச்சு உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டாங்களே.. அவங்க/ அவரு பாவம் ..! விட்டுடுங்க. நண்பர்களோ.. உறவினர்களோ.. குடும்பத்தினரோ.. (குறிப்பா மம்மி டாடி) அவங்களோட சின்ன்ன்னக் குற்றங்களைப் பெரிது படுத்தாதீங்க. ஒங்க கிட்ட தேவையே இல்லாத வகைல அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இதனால் ஒங்களோட தன்னம்பிக்கை குறையும். எதுக்குங்க இப்பிடி இருக்கீங்க.  வெற்றி பெற முடியுங்க. ஜஸ்ட் நீங்க உற்சாகமா  முயற்சி செய்யணும். தட்ஸ் ஆல்.

கடகம்

யம்மாடியோ.. குடும்பத்துல ஒரு கெட் டு கெதர்.. அல்லது திருமணம் வந்து எல்லாரும் மீட் செய்யப்போறீங்க. நிறையப் பகைகளும் சண்டைகளும் ஒரு முடிவுக்கு வரும். நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். யாரையோ வழியனுப்ப ஏர்போர்ட் போவீங்க. உங்களுக்கு ஒரிஜினலாவே ஒரு புத்திசாலித்தனம் உண்டல்லவா? அது இப்போ மேலும் ஷைன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். திடீர்னு வருமானமும் லாபமும் அதிகரிக்கும். பல காலம் வசூலாகாத தொகையெல்லாம் வரும். ரொம்பவும் திடீர் செலவும் உண்டு. கவனமாய்… தயாராய் இருங்க. எது எப்பிடி இருந்தாலும்கூட இந்த வாரம் ஒங்களுக்குச் சிறப்பான வாரம். சில குட் நியூஸ் எல்லாம் காதுல விழும். கலைத்துறைல இன்டரெஸ்ட் வரும். திடீர் சுப நிகழ்ச்சி உங்களை  ஹாப்பியா ஆக்கும்.  டாடிக்கு ஒரு சந்தோஷ நியூஸ் வரும். இதனால வீடே குதூகலமாகும்.

சிம்மம்

ஒரே சமயத்துல பல விஷயங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். சாப்பிட தூங்க நேரம் ஒதுக்கிக்குங்க. சொல்லிட்டேன். அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒரு பக்கமும்..  விசா பாஸ்போர்ட் போன்ற வெளிநாட்டு வேலைகள் இன்னொரு பக்கமும்… கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள் மறுபக்கமும்.. திருமணம் காதல் போன்றவை மற்றொரு பக்கமும்.. உங்களைப் பிடிச்சு இழுக்கும். எந்தப் பக்கம் திரும்புவது என்ற குழப்பமெல்லாம் இல்லாமல் அழகாய்த் திட்டமிட்டு செய்ய உங்களுக்கா சொல்லிக்கொடுக்கணும். ஜமாயுங்க. உங்களோட உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக்கணுங்க. சவாலான சூழ்நிலைகள் காரணமா இந்த வாரம் சமநிலை இழந்துடாதபடி பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்கணும். நம்பிக்கையோட செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். மனசுல சந்தோஷம் வர்றதுக்கு உங்க செயல்களே காரணமா அமையும்.

கன்னி

பல வகை செலவுகள் வருதேன்னு டென்ஷன் ஆகாதீங்க. பல செலவுகளை ஜாலியாத்தானே செய்யறீங்க? மேலும் செலவுக்கேத்த வருமானம் வருதில்லையா? பின்ன என்ன? அது மட்டுமா என்ன? திடீர் அதிருஷ்ட வாய்ப்பெல்லாம் வந்து உங்களை மகிழ்ச்சிக்கடலில் திக்குமுக்காட வைக்கும். நிறைய நண்பர்கள் புதுசு புதுசாச் சேருவாங்க. பழைய பகைவர்கள்கூட வெள்ளைக்கொடி காட்டி நட்புக்கரம் நீட்டுவாங்க. சேர்த்துக்குங்க. எனினும் சற்று ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பது நல்லதுங்க. ஏற்கனவே பலரிடம் பட்டுட்டீங்க. போதாதா? லோன் போட  இது நேரம் இல்லை. அற்பத்தனமாக காரணங்களுக்காக வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு உரையாடலை தொடங்குமுன் ஒருமுறைக்கு இருமுறை யோசிங்க. விட்டுக்கொடுக்கும் அணுகுமுறை தேவைங்க. குட்டியூண்டு விஷயங்களைப் பெரிசா எடுத்துக்க வேணாங்க.

துலாம்

அடேயப்பா.. எத்தனை விதமான வரும்படிகள்.. லாபங்கள்.. நன்மைகள்… மகிழ்ச்சிகள்? என்றைக்கோ கொடுத்த கடன்கள் நீங்க கேட்காமலேயே உங்க வீட்டு வாசல்ல வந்து காலிங்பெல் அடிக்கும். அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய தொகை பல கால காத்திருப்புக்குப்பிறகு ஏராளமான முயற்சிகளுக்குப் பிறகு இப்போ உங்களை வந்தடையும். குடும்பத்துல பிரிஞ்சு போனவங்களும் சண்டை போட்டவங்களும் ஒண்ணாச் சேரப்போறாங்க. சின்னச்சின்ன அஜீரணப் பிரச்சினைகளைப் பற்றி ஒரேயடியாய்ப் பயந்து டென்ஷன் ஆகி வெக்காதீங்க. வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும் என்றாலும் உறுதியுடனும் கவனமுடனும் செயல்பட்டு அதனை சமாளிச்சு வெற்றி காண்பீங்க. ஒங்களோட அஃபிஷியல் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இலக்குகளை அடைவதற்கான தன்னம்பிக்கை உங்க கிட்ட நிறைஞ்சு காணப்படும். அப்பாவின் விருப்பம் ஒண்ணு நிறைவேறும்.

விருச்சிகம்

மனம் நிறைந்த மண வாழ்வு அமையும். நீங்க எதிர்பார்த்ததெல்லாம் நல்லபடியா நிறைவேறும். குழந்தைங்களைப் பற்றி இருந்து வந்த டென்ஷன்கள் அகலும். வெடுக்கென்று பேசி மத்தவங்க மனசைப் புண்படுத்திடாதீங்க. அவங்க பெரிசா ரியாக்ட் செய்துட மாட்டாங்க. பிரச்சினையோ சண்டையோ வராதுதான். ஆனா நீங்க நினைச்சு நினைச்சு வருத்தப்படக்கூடாதில்லையா? சட்டென்று அவசரமாக முடிவுகள் எடுக்க வேணாங்க. குறிப்பாக வீடு வாங்குவது.. கல்யாணம் போன்ற பெரிய விஷயங்களில் யோசனையுடன் செயல்படுங்க. நன்மை கருதுபவர்களின் அட்வைஸ் கேளுங்க. பணிகள் அதிகமாக் காணப்படும். ஒங்களோட இலக்குகளை நீங்க அடைவீங்க. முக்கியமான முடிவுகள் எடுக்க இது உகந்த வாரம். பல காலம் நீங்க அனுபவிச்சுக்கிட்டிருந்த பிரச்னைங்க ஒவ்வொண்ணா விலகி மனசுல சந்தோஷமும் உற்சாகமும் அதிகரிக்கும்.

தனுசு

நல்ல நண்பர்கள் ஏராளமான நன்மைகள் செய்வாங்க. பகைவர்கள் மனசு மாறி உங்க அருமை உணர்ந்து மனசார மன்னிப்புக் கேட்பாங்க. தாராளமாக மன்னிக்கலாம். நம்பி ஏற்கலாம்ங்க. சகோதர சகோதரிகள் ஒரு நாளைக்கு நடந்துக்கிட்டா மாதிரி மறு நாள் நடந்துக்க மாட்டாங்க. கவனமா இருங்க. ஆனாலும் நீங்க நீங்களாவே இருங்க. உணர்வாங்க. சின்னச்சின்ன உடல் உபாதைகள் ஏற்படும். மெல்லமெல்லத்தான் சரியாகும். செலவுகள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். எல்லாத்தையும் கவனமாய்த் திட்டமிட்டுத்தான் செய்யறீங்க. எதிலுமே அவசரம் வேண்டாம். பேச்சினால் நன்மைகள் உண்டாகும். மகிழ்ச்சிகரமாக வாரமா இருக்கும். ஒங்களோட செயல்களை கவனமாக ஆற்றுவீங்க. ஒங்களோட நண்பர்களின் ஆதரவைப் பெறுவீங்க. இந்த வாரத்தை நல்லாப்  பயன்படுத்திக்குங்க.

சந்திராஷ்டமம்: ஜுன் 30 முதல் ஜூலை 3 வரை, சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.

மகரம்

கொஞ்சம் ஆரோக்யம் கண்ணாமூச்சி காட்டும். கவனமாயிருங்க. பெரிசாய் சர்ஜரி அது இதுன்ன ஆகாது.. பயம் வேண்டாம். நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிடும்படியாக வரலாம். கண் டெஸ்ட் செய்யணும்னா கண்டிப்பா செய்துக்குங்க. சுத்தமும் சுகாதாரமுமாய் உடம்பை வைச்சுக்குங்க. பெண்களுக்கு மாதாந்திரப் பிரச்சினை சம்பந்தமான சின்ன சின்ன உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. ஆனாலும் நீடித்த பிரச்சினையாய் எந்த ஆரோக்யக் குறைபாடுமே இருக்காது. ஒங்களோட கணவரின்/ மனைவியின் புத்திசாலித்தனம் காரணமாக அவருக்கு அலுவலகத்தில் புகழும் உங்களுக்குக் குடும்ப சர்க்கிளில் நன்மைகளும் உண்டு. அவசியமே இல்லாமல் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக்காதீங்கங்கப்பா. நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருங்க. உண்மையில் உங்களால  சாத்தியமான ஈஸியான விஷயங்களைக்கூடப் பார்த்து எதுக்காக பயந்து ஒதுங்கி உங்களால முடியாதுன்னு நெனைக்கறீங்க?

சந்திராஷ்டமம் ஜூலை 3 முதல் ஜூலை 5 வரை, சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.

கும்பம்

ஒன்றுக்கு மேற்பட்ட லாபங்களும் வருமானங்களும் கிடைக்கும். ஆனால் அதை வகையாக எப்படி எங்கே இன்வெஸ்ட் செய்வது என்று உங்களின் நலம் விரும்பும் பெரியோரின் ஆலோசனை கேட்டு முடிவு செய்ங்க. ஸ்டூடன்ட்ஸ் பெருமைப்படும்படியான சம்பவங்கள் நடக்கும்.  புகழும் பெருமையும் வெற்றியும் அடைவீங்க. நீங்களே எதிர்பார்க்காத அளவு பொறுமையும் பக்குவமும் வந்திருக்குமே. ஆனால் அது விரக்தியா மாறாமல் பார்த்துக்குங்க. குறிப்பாய்க் காதல் விவகாரங்களில் சில சறுக்கல்களும் ஏமாற்றங்களும் ஏற்படாதபடி பேசிப்பழகுங்க.  உங்க குழந்தைங்க ஆபீஸ்ல வெற்றி பெற்று அவார்ட் ரிவார்ட் வாங்குவாங்க. நீங்க விரும்பிய விஷயங்கள் நடக்கலைன்னு எரிச்சல்ல இருந்தீங்க. வெயிட்டீஸ். நீங்களே எதிர்பார்க்காதபடி நீங்க விரும்பிய திருப்பங்கள் உங்களுக்கே தெரியாதபடி நடந்துக்கிட்டிருக்கு. குல தெய்வத்தை வணங்குங்க.

சந்திராஷ்டமம் ஜூலை 5 முதல் ஜூலை 7 வரை, சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.

மீனம்

அம்மாவுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். அம்மா வழி உறவினர்களைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தும்படியான விசேஷங்கள் நிகழும். அவங்க அரசாங்க உத்யோகத்தில் இருக்கறவங்க என்றால் அவங்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். பல விதமான கல்விகளில் உங்களை ஈடுபடுத்திப்பீங்க. இப்போது ஈடுபடும் தேர்வுகள் அனைத்திலும் நல்ல ரிசல்ட் உறுதியா வருங்க. சகோதர சகோதரிங்க கிட்ட  சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் அட்ஜஸ்ட் ஆயிடும்.  அவங்களுக்கு உங்க உதவி தேவையா இருக்கும். ஜமாய்ச்சு நல்ல பெயர் எடுத்துடுவீங்க. நடுவுல கொஞ்சம் உடம்பு சரியில்லாம போனபோது மனசளவுல டவுன் ஆயிட்டீங்க. ஒய்? அதெல்லாம் கடந்து செல்லும் மேகம் மாதிரிங்க. கணவருக்கு அல்லது மனைவிக்கு ஒரு குட் நியூஸ் உண்டு. அவசரப்பட்டு எ….தையுமே பேசிடாதீங்க. கவனமா இருங்க.

More articles

Latest article