மேஷம்
டாடி மம்மி வழி ரிலேட்டிவ்ஸ் கிட்ட எதிர்பார்த்த உதவிங்களைப் பெறுவீங்க. உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளும் நேசக்கரம் நீட்டு வாங்க. கவலைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தணுங்க. மற்றபடி மேலதிகாரிங்க மூலம் சில டென்ஷன்ஸ் ஏற்படலாம். சக ஊழியர்களிடம் அனுசரிச்சு நடக்க வும். வியாபாரிங்களுக்கு சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். அதோடு பழைய கடன்களையும் திருப்பி அடைப்பீங்க.. இதுநாள் வரை என்னடா வாழ்க்கை என்று கவலைப்பட்டு வந்த உங்களுக்கு இனி நல்ல காலம்தான் வெற்றி நடை போடுங்க. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வார இறுதியில் நல்ல செய்தி தேடி வரும். வரன் பேசி முடிக்கலாம்.
ரிஷபம்
வேலை தேடறவங்களுக்குப் புது வேலை பற்றிய தகவல்கள் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ்க்குப் புதிய பாதை பிறக்கும். ஃபாரின் யோகம் தேடி வரப்போகுது. பெரியவங்களின் ஆலோசனை அவசியம் தேவை. இல்லத்தரசிங்களுக்கு இது ஹாப்பி வாரம் வீட்டில் மதிப்பு மரியாதை கூடும். ஹஸ்பெண்ட் தங்க நகை வாங்கிக்கொடுப்பார் வாங்கிக்கங்க. என்ஜாய். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. இந்த வாரம் உங்களின் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும், மதிப்பு மரியாதை கூடும். அன்னதானம் பண்ணுங்களேன். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீங்க. உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை
மிதுனம்
வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீங்க. உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும். இந்த வாரம் உங்களின் வார்த்தைகளில் இனிமை கூடும். உங்க பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். உங்க ராசிநாதனால் நிறைய பண இன்கம் வரப்போகிறது. வரப்போகிற மகாலட்சுமியை வரவேற்று பத்திரமாக வைத்துக்கொள்ளுங் கள். இந்த வாரம் சுபகாரிய முயற்சிகளில் சில தடைகள் வரலாம் கவலைப்படாதீங்க நடந்தது நன்மைக்கு தான்னு நினைங்க. பெரிய மாற்றங்கள் நடக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க மெடிக்கல் செலவுகள் வரலாம். வியாபாரத்தில பெரிய அளவில லாபம் கிடைக்கும் எதிர்பார்க்க முடியாது
சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 4 வரை
கடகம்
அரசியல்வாதிங்களுக்குப் புதுப் பதவிங்க கிடைக்கும். சமுதாயப் பணி செய்து, அதில் நிம்மதி அடைவீங்க. கலைத்துறையினர் கடமையை உணர்ந்து செயல்பட்டு புதிய ஒப்பந்தங்களைப் பெறுவாங்க. பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரின் தேவையை அறிந்து நடப்பீங்க. மாணவமணிகள் தங்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வாங்க. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களுக்கு பணஇன்கம் அபரிமிதமாக இருக்கும். அதன் மூலம் பொன் பொருள் சேரும். மனதில் சில சஞ்சலங்கள் இருந்தாலும் வார இறுதியில் அது சந்தோஷமாக மாறும். எதிர்மறை எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கப்பா.
சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 7 வரை
சிம்மம்
சரியான நேரத்திற்காக காத்திருங்க. இல்லத்தரசிகள் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து பேசுங்க காரணம் உங்க பேச்சு உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு இருக்கு கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது. திடீர் வெற்றிகள் வந்து திக்குமுக்காட வைக்கும். கவனமும் எச்சரிக்கையும் தேவை. குடும்ப வாழ்க்கையில் சில சங்கடங்கள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. பேச்சில் கவனமாக இருங்க இல்லாவிட்டால் உங்களுக்கு அவமானங்கள் வந்து சேரும். எதிர்பாலினத்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்க. உங்க பிள்ளைகளை கவனமாக பார்த்துக்குங்க. குழந்தைங்களால உங்களுக்கும் உங்களால குழந்தைங்களுக்கும் நல்லதுங்க நடக்கும்.
கன்னி
அவங்க ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. கமிஷன் வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு இந்த வாரம் சில ஹாப்பியபன அனுபவங்கள் கிடைக்குங்க. வீட்டில் பேசும் போது கேர்ஃபுல்லா இருங்க. திடீர் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு அதனால திடீர் மெடிகல் செலவுகள் வாரலாம். ஸ்டூடன்ட்ஸ் படிப்பில் கவனமாக இருங்க. தேவையில்லாத விசயங்களை கவனம் செலுத்தாதீங்கப்பா. பழைய பிரச்சினைகள் மீது கோபப்பட்டுக்கிட்டிருக்க வேணாம். மத்தவங்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத் தில் சிக்கி கொள்ளாதீங்க. வியாபாரத்தில் வேலையாட் களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லதுங்க. உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீங்க. பொறுமை தேவைப்படும்
துலாம்
பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீங்க. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீங்க. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீங்க. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீங்க. உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும். உயர்கல்விக்காகக் காத்துக்கிட்டிருக்கறவங்களுக்கு பேரன்ட்ஸ், ஆசிரியர்கள் ஆலோசனை கெடைக்கும். தலை, கண் தொடர்பான நோய்கள் வரலாம் கவனம், தொழில் அதிபர்களுக்கு ரொம்பநாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நல்ல செய்தி தேடி வரும்.கடந்த கால சந்தோஷங்கள் மீட்டெடுப்பீங்க.
விருச்சிகம்
இந்த வாரம் உங்க ஆரோக்கியத்தில கவனமாக இருப்பீங்க. சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். எந்த காரியம் ஆரம்பித்தாலும் தடை வருதே என்று பயப்படாதீங்க. எல்லாம் நல்லதுங்கக்குத்தான் என்று நினைங்க. பிசினஸ் செய்யறவங்களுக்கு இந்த வாரம் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவில் சில தடைகள் ஏற்படும் எச்சரிக்கையாக யோசித்து பண்ணுங்க தோல்வியை தவிர்க்கவும். வேலையில கவனமாகவும் எச்சரிக்கையாக இருங்க உங்க கூட வேலை செய்பவர்களே உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல், ஜாமீன் கையெழுத்து விசயங்களில் எச்சரிக்கையா இருங்க. குடும்பத்தில் உள்ளவர்க ளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீங்க.
தனுசு
பொதுக் காரியங்களில் ஈடுபடுவீங்க. வழக்கில் வெற்றி பெறுவீங்க. வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவாங்க. வியாபாரத்தில் இன்கம் உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைங்களையும் ஈசியா முடிப்பீங்க. தொட்டது துலங்கும். புதிய திட்டங்கள் நிறை வேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவாங்க. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீங்க. நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீங்க. சின்னச் சின்ன சங்கடங்கள் வந்தாலும் எதையும் தைரியமாக எதிர்கொள்வீங்க. செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் தேடி வரும். இத்தனை நாட்களாக வராத பணம் எல்லாம் வரும்.
மகரம்
உணவுல கவனமா இருங்க இல்லாட்டி வயிறு பிராப்ளம் வந்து மெடிக்கல் செலவு ஏற்படும். குடும்ப தலைவிகளுக்கு இது ரொம்ப நல்ல வாரம், திடீர் செலவுகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புத்திரபாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். சுய தொழில் செய்பவர்களுக்கு திடீர் லாபங்கள் வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் பிடிச்ச காலேஜில் உங்க மனசுக்கு பிடிச்ச சப்ஜெக்ட் படிக்க வாய்ப்பு தேடி வரும். இந்த வாரம் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். நல்ல செய்திகள் தேடி வரும், இத்தனை நாட்களாக எந்த வருமானமும் இல்லையே என்று யோசிக்கிறீர்களா? பணமழை பொழியப்போகிறது. வாங்கிய கடன்களை செட்டில் செய்வீங்க. வார்த்தைகளை கவனமாக பேசுங்க
கும்பம்
கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாதுன்னு நல்லா நினைவு வெச்சுக்குங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிராப்ளம்ஸ் வரலாம். லவ்வர்ஸ் கவனமாக இருங்க பேச்சில் கவனமாக இல்லாவிட்டால் பிரிவு ஏற்படும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புத்துணர்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். நிறைய முதலீடுகளை செய்து அகலக்கால் வைக்காதீங்க. கூட வேலை செய்பவர்களே உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் கவனமாக இருங்க. யார் எதை சொன்னாலும் நம்பி இறங்கிடாதீங்க அப்புறம் சங்கடங்கள் ஏற்படலாம். நிறைய டென்சன் வந்தாலும் எதையும் சமாளிச்சு கூல் ஆக ஹேண்டில் பண்ணுங்க. பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவாங்க.
மீனம்
தாய்வழி ரிலேட்டிவ்ஸ்ஸால் அலைச்சல் ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீங்க. கலைப் பொருட்கள் வாங்குவீங்க. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீங்க. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீங்க. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இந்த வாரம் சுப காரியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வரன் பற்றிய பேச்சுகளில் சில சிக்கல்கள் வரலாம் முடிவுகளை ஒத்திப்போடுங்க. வேலை தேடறவங்களுக்கு இந்த வாரம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே என்று ஆதங்கத்தை தரலாம். வார இறுதியில் நல்ல செய்திகள் தேடி வரும். திடீர் பண இன்கம் வந்து திக்கு முக்காட வைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரலாம். வங்கிக்கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கு. திடீர் வீண் செலவுகள் வரலாம் கவனம்.