இந்தியாவில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக இன்று அனைத்தும் டிஜிட்டல்மயமாக மாறி வருகிறது. தற்போதைய கொரோனா நடவடிக்கை, அனைத்து செயல்களை யுமே டிஜிட்டல் மயமாக உருமாற்றி வருகிறது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இணையத்தையே சுற்றி வருகின்றனர். அனைத்து மாணாக்கர்களுக்கும் இ-லேர்னிங் எனப்படும் வகையில் ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கும் நிலை உருவாகி உள்ளது.
இந்த நவீன யுகத்தில், உலகம் முழுவதும் உள்ள தமிழ்மக்கள் உள்பட இணையவாசிகளுக்கு உடனுக்குடன், தமிழகம், இந்தியா, உலகம், திரையுலகம் உள்பட அனைத்துவிதமான செய்திகளையும் உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதற்காக கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 29ந்தேதி தொடங்கப்பட்டதுதான் பத்திரிகை.காம் (www.patrikai.com) செய்தி இணையதளம்.
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், 5 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 6வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது உங்கள் பத்திரிகை டாட் காம்.
பத்திரிகை டாட் காம் வெற்றிக்கு உழைத்திட்ட, நிர்வாகத்தினர், முன்னாள், இன்னாள் செய்தி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கும் பத்திரிகை டாட் காம் இணைய இதழ் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி.