டிஜிட்டல் புரட்சியின் வளர்ச்சியால் இன்று உள்ளங்கையில் உலகமே சுழல்கிறது.  அதே தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளமும், 7வது  ஆண்டில் நுழைந்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட பத்திரிகை டாட் காம் இணையதளம், மெல்ல மெல்ல தவழ்ந்து, எழுந்து, தற்போது வாசகர்களின் ஆதரவுடன் 7வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

தமிழ்நாடு, இந்தியா. உலக நாடுகளின் செய்திகள் மட்டுமின்றி ஆன்மிகம், சமையல், அரசியல் உள்பட அனைத்து வகையான செய்திகளையும், சிறப்புசெய்திகளையும், வெறும் செய்தியாக மட்டுமின்றி ஆடியோ, வீடியோ வடிவிலும் நவரசத்துடன் வழங்கி வருகிறது.

தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில், பிறந்த  குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை  அனைவரும் இணையத்தையே சுற்றி சுற்றி வருகின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதில் பத்திரிகை டாட் காம் இணையதளமும் சிறப்பான பங்காற்றி வருகிறது.

பத்திரிகை டாட் காம் தொடர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வரும், நிர்வாகத்தினர், முன்னாள், இன்னாள் செய்தி  ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும்  ஆதரவு அளித்து வரும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கும் பத்திரிகை டாட் காம் இணைய இதழ் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

-ஆசிரியர்