பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு தனது ரசிகர்களை மகிழ்விக்க பதான் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் 2023 ம் ஆண்டு ஜனவரி 25 ம் தேதி வெளியாகிறது.

தீபிகா படுகோன், டிம்பிள் கபாடியா, ஜான் ஆப்ரகாம் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது.