பிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் தொடரில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ், இந்திய அணியை விடாமல் விரட்டி வருகிறார்.
இதுவரை பறிக்கப்பட்டுள்ள இந்தியாவின் 5 விக்கெட்டுகளில் அவரின் பங்களிப்பு 4 என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றையப் போட்டியில், ரோகித் ஷர்மா, அஜின்கியா ரஹானே, சத்தீஷ்வர் புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார் கம்மின்ஸ். ஷப்மன் கில்லின் விக்கெட் நாதன் லயனுக்கு கிடைத்தது.
தற்போதைய சூழலில், இந்திய வெற்றிக்கு 74 பந்துகளில் 62 ரன்கள் தேவை. வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமானால், ரிஷப் பன்ட்டும், வாஷிங்டன் சுந்தரும் களத்தில் தொடர்ந்து நின்றாக வேண்டும்.