டிகை மீரா மிதுன் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றவர். அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துபவர். சமீபத்தில் விஜய், சூர்யா, திரிஷா ஆகியோரைப் பற்றி சர்ச்சைக் கருத்துக்கள் வெளியிட் டார். அதற்கு இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்தார். சில தினங்களுக்கு முன் கமலின் பிக்பாஸ் 4 போட்டியை நடத்தவிடமாட்டேன். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை பெறுவேன் என்று பரபரப்பாக கூறிய துடன் கமல்ஹாசனையும் வசை மாரி பொழிந்தார்.


தற்போது தனது சமூக வலை தள பக்கத் தில் தான் இறந்துவிட்டதாக தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். ’மீரா மிதுன் இறந்து விட்டார். போஸ்ட் மார்ட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. போலீஸ் விசாரணையை தொடங்கி இருக்கிறது ஆன்மா சந்தி அடையட்டும்’ என அதில் தெரிவித்தி ருக்கிறார்.


இது பலருக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது. இது அவரே பதிவிட்ட மெஸேஜா, அல்லது அவரது டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து வேறு யாராவது பதிவு செய்தார்களா? என்ற கேள்வி எழுந் துள்ளது.