சென்னை:
பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கும் வகையில், வரும் ஞாயிறன்று நாடு முழுவதும் பயணிகள் ரயில் இயக்கப்படாது என்று ரயில்வே அறிவித்து உள்ளது.

நாளை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை வரை பயணிகள் ரயில்கள் இயக்கப்படாது என்று இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது.
ஏற்கனவே அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசு ரயில் சேவையையும் ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.
மேலும் வணிக நிறுவனங்கள் அன்றைய தினம் முழு அடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிறன்று பந்த் போலவே அனைத்து நடவடிக்கைகளையும் முடங்கும்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel