பயங்கள் பலவகை, விமானத்தில் பறக்க சிலருக்கு பயம். அப்படிப்பட்ட உச்சக்கட்ட பயத்தில் இருந்த பெண் பயணியை ஆறுதல் படுத்திய விமான பணிப்பெண்ணின் கையைப் பிடித்து கடித்து குதறிவிட்டார் அந்தப் பயணி.
பார்சிலோனாவின் எல் ப்ராட் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் பயணிகளின் பயணச் சீட்டுகளை பரிசோதித்துக் கொண்டிருந்தார் அந்தப் பணிப்பெண். அப்போது பயத்தின் உச்சியில் நடுங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் வந்தபோது அப்பெண் விமானப் பணிப்பெண்ணிக் கரங்களை இறுக பற்றிக்கொண்டிருக்கிறார். இவருக்கு ஏதோ பிரச்சனை என்று உணர்ந்த பணிப்பெண் அவரை ஆற்றுப்படுத்த நினைத்து அவரது கரங்களைப் பிடித்து ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த போது திடீரென்று நினைத்துப் பார்க்கமுடியாத வகையில் அப்பெண் விமானப் பணிப்பெண்ணின் கைகளை பிடித்து கடித்து வைத்து விட்டார்.
அவரது பற்கள் ஆழமாக உள்ளே இறங்குமளவுக்கு கடித்து வைத்திருப்பதை படத்தில் பார்க்கும்போது தெரிகிறது. இதுபற்றி கருத்து தெரிவித்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் இந்த விமான நிலையத்தில் இது போன்ற நிகழ்வுகள் புதிதல்ல. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் இங்கு பணிபுரிபவர்கள் பயணிகளால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும் அப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய பயனிகள் மறுபடியும் விமானங்களில் பறக்க அனுமதிக்கப்படுவது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.