ஸ்ரீநகர்

டந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்ற கட்சி விவரங்கள் வெளியாகி உள்ளன.

மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. ந்வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதன்படி இந்தியா கூட்டணி வெற்ற்பெற்றது

இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டியிட்டநிலயில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இ, உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆகிறார்.

அதே வெளையில்அரசியலில் மூத்த தலைவராக அறியப்படும் குலாம் நபி ஆசாத்தின் கட்சிக்கு நோட்டாவைவிட குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பது அவரின் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ள குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் மக்களவைத் தோ்தலுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகி ’ஜனநாயக முற்போக்கு விடுதலைக் கட்சி (டிபிஏபி)’ என்ற தனிக்கட்சியை தொடங்கினாா்.

காஷ்மீர் சட்டபேரவைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு விடுதலைக் கட்சி, 23 தொகுதிகளில் போட்டியிட்டது. குலாம் நபி ஆசாத் உடல்நிலை காரணமாக தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவில்லை.,எனவே அவரின் கட்சி மக்கள் மத்தியில் கவனம் பெற முடியாத சூழலை உருவாக்கியது..

தேர்தல் முடிவுகளின்படி, அவரது கட்சி வேட்பாளர்கள் 5 பேர், நோட்டாவைவிட குறைவான வாக்குகளை பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளனர். ஒஎய்ஜ்ச் போட்டியிட்ட 23 தொகுதிகளில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சிக்கு 10 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. குலாம் நபி ஆசாத்தின் கட்சி சராசரியாக 5.34 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.