சென்னை:
டெல்லி நிஜாமுதீன் மத கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், கேரளா, புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
டெல்லி நிஜாமுதீனில்ஜமாத் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1131 பேர் கலந்து கொண்டனர். அதில் 515 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஊர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
அதுபோல கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக மலப்புரம் எஸ்.பி தெரிவித்து உள்ளார்.
டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்று திரும்பிய புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டில் பங்கேற்ற 7 பேர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்படுகிறது
இதனையடுத்து அவர்கள் வசித்து வந்த அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதி சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.