நேற்று IPL 2016 போட்டியில் , கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மொஹாலியில் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி மும்பை அணியை செய்ய அழைத்தனர் .

மும்பை அணியின் ரோஹித் ஷர்மா சொற்ப ரன்களுக்கு அவுட் ஆக , அம்பத்தி ராயுடு மற்று படேல் ஜோடியின் பொறுமையான ஆட்டம் மற்றும் மிதமான அதிரடி ஆட்டம் மூலம், மும்பை அணி 20 ஓவர் முடிய ஆறு விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. ராயுடு மற்றும் படேல் ஜோடி 137 ரன்கள் இரண்டம் விக்கெட்க்கு கூட்டாக எடுத்தனர்.
பஞ்சாப் அணியின் விஜய் மற்றும் வோரா பவர் ப்ளேவில் அவுட் ஆனர்கள். மார்ஸ் மற்றும் மாக்ஸ்வெல் பொறுப்பாக ஆடினர் ஆனால் பும்ராஹ் மற்றும் சௌதி ஆகியோரின் பௌலிங்க்கு ஈடு கொடுக்க முடியாமல் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிய 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தனர். மும்பை அணி இந்த போட்டியை 25 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றனர். பும்ராஹ், சௌதி மற்றும் மெக்க்லேகன் சிறப்பாக பௌலிங் செய்தனர்.
இந்த தோல்வி மூலம் கிங்க்ஸ் பஞ்சாப் அணி IPL 2016 அடுத்த கட்டிற்கு செல்ல மிகவும் கடினம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
Patrikai.com official YouTube Channel