ஒப்பந்த தொழிலாளர் ஊதியம் 10 ஆயிரமாக உயர்வு

Must read

a
நாடு முழுவதும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச  ஊதியத்தை .10 ஆயிரம் ரூபாயாகமத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது குறித்து  மத்திய தொழிலாளர் நலத்துறை இணை மந்திரி பண்டாருதத்தாத்ரேய தெரிவித்துள்ளதாவது:
“உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.நுகர்வோர் விலை குறியீடு மற்றும் டி.ஏ அடிப்படையில் இந்த சம்பளம் அதிகரிக்கப்படுகிறது.
இந்த குறைந்தபட்ச  ஊதியம் பென்சன் மற்றும் போனஸ் ஆகியவற்றிலும் இணைக்கப்படுகிறது. தொழிலாளர்நலச்சட்டங்களில் தொடர்ந்து பல மாற்றங்களை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.. ஒப்பந்த தொழிலாளர்சட்ட விதிமுறைகளில் 25-வது விதியில் மாற்றங்களை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்கீழ், குறைந்தபட்சஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது”  –  இவ்வாறு அவர்  கூறினார்.

More articles

Latest article