
இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபனின் உதவியாளராக பணிபுரிபவர் ஜெயம்கொண்டான்.
பார்த்திபனின் திருவான்மியூர் வீட்டில் கொள்ளை போனதை அடுத்து ஜெயங்கொண்டானை பணியில் இருந்து நீக்கினார் பார்த்திபன்.
இவர் தான் இப்போது பார்த்திபன் கொலை செய்ய முயற்சி செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கொள்ளை பற்றி போலீஸ் விசாரித்த நிலையில் தன்னை பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், பணிநீக்க காரணத்தை கேட்க சென்றபோது பார்த்திபனும், உதவியாளரும் தாக்கியதாகவும் ஜெயங்கொண்டான் புகாரளித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel