புதுடெல்லி: கொரோனா ஊரடங்கின்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுத்த முடிவுகள் குறித்து, தொழிலாளர்களுக்கான நாடாளுமன்ற கமிட்டி, ஆய்வுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கின்போது, தங்களின் சொந்த மாநிலங்களுக்கு பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆய்வுசெய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம், நாடாளுமன்றத்தில் மழைகால கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி, தொழிலாளர்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூடும்போது, புலம்பெயர் தொழிலாளர் நலன்களுக்காக ரூ.20 லட்சம் கோடி அளவிலான நலத்திட்டங்களை அறிவித்தது மோடி அரசு. மேலும், 80 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த அறிவிப்புகள் வெறும் ஜாலங்கள் என்றும் விமர்சிக்கப்பட்டன. இந்நிலையில்தான், இவை குறித்து பணியாளர்களுக்கான நாடாளுமன்ற கமிட்டி ஆய்வுசெய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.