டெல்லி: காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீனா ராணுவத்துக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் நீண்ட விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில்,  கிழக்கு லடாக் பகுதியில் உள்ள  பாங்காக் ஏரிப் பகுதிக்கும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கும்,  செல்ல பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது.

எல்லைப்பகுதி சர்ச்சையில் மோடி அரசு பொய் சொல்லி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் பதில் கூறிய   பாதுகாப்புத்துறை அமைச்சர்,  லடாக் கிழக்குப் பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, லடாக் எல்லை  விவகாரத்தில் ஒரு இன்ச் நிலத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றவர்,  எல்லை பதற்றத்தை  தணிக்க 9 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், எல்லையில் உள்ள  பாங்காங் ஏரி அருகே குவிக்கப்பட்டிருக்கும் படைகளை  இருதரப்பும்  விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது. அதுதொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

ஆனால், ராஜ்நாத் சிங்கின் பதிலில் உண்மை இல்லை என்றும், ஃபிங்கர்  பகுதியை சீனா ராணுவம் ஆக்கிரமித்துள்ளது என காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.  “ இந்திய எல்லைப்பகுதியை சீன ராணுவத்துக்கு மத்திய அரசு விட்டுக்கொடுத்துவிட்டது. ஃபிங்கர்-4 பாயின்ட் என்பது இந்தியாவின் எல்லை. அங்குவரை நமது எல்லைப்பகுதியாக பயன்படுத்தி வருகிறோம். இப்போது நாம் ஃபிங்கர்-4 பாயின்ட் பகுதியிலிருந்து ஃபிங்கர்-3 பாயின்ட் பகுதிக்கு நகர்கிறோம். எதற்காக இந்தியாவின் எல்லைப்பகுதியை சீன ராணுவத்துக்கு பிரதமர் மோடி விட்டுக்கொடுத்தார். இந்த கேள்விக்கு பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் பதில் அளிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், உண்மை நிலவரம் குறித்து ஆராய் நாடாளுமன்ற பாதுகாப்புத்துறைகான நிலைக்குழு  அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆராய முடிவு செய்துள்ளது.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜுவல் ஓரம் தலைமையிலா  பாதுகாப்புத்துறைக்கான நாாடாளுமன்ற நிலைக்குழுவில் மொத்தம் 30 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில், ராகுல்காந்தியும் ஒருவர். இந்த நிலைக்குழுவினர்  லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக விவாதித்து ,  வரும் மே மாதம் இறுதியில் அல்லது ஜுன் மாதத்தில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிலைக்குழுவுக்கு மத்தியஅரசு  அனுமதி வழங்கியதும்,  கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி பகுதிகளுக்கு  செல்ல உள்ளது.

உள்ள கால்வான் பள்ளத்தாக்குக்கு செல்ல பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு முடிவு செய்கிறது.

இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியப் பகுதியை சீனாவிற்கு “ஒப்படைத்துவிட்டார்” என்று குற்றம் சாட்டிய சில மணிநேரங்களுக்குப் பின்னர், பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,   பாங்கோங் த்சோ பகுதியில் இந்தியப் பகுதி விரல் (ஃபிங்கர்) 4 வரை உள்ளது என்ற கூற்று தவறானது என  மறுத்துள்ளது.