சென்னை:
ஜூலை 15 முதல் நாடாளுமன்ற தேர்தல் பணி தொடங்க உள்ளோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் , வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது, வாக்குச்சாவடிகளை பணிகளை முழுமை செய்வது, மண்டல் கமிட்டி அமைப்பது, காமராஜர் பிறந்தநாளை அனைத்து வட்டாரங்களிலும், நகரங்களிலும் கொண்டாடுவது,
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 100 காங்கிரஸ் கொடி அமைப்பதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் செய்திருக்கிற சாதனை,மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளை மறுசீரமைத்தல், ஒரு சட்டமன்ற தொகுதியை கொண்ட மாவட்டங்களுக்கு அருகாமையில் உள்ள மற்றொரு மாவட்டத்தில் இருந்து சட்டமன்ற தொகுதியை பிரித்தளித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஜூலை 15 முதல் நாடாளுமன்ற தேர்தல் பணி தொடங்க உள்ளோம் என்றும், ஜூலை 15-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அரசிடம் கோரிகை வைத்துள்ளோம் என்றார்,
தொடர்ந்து பேசிய அவர், தேர்த்லில் தோல்வி உறுதி என்பதால் பொது சிவில் சட்டம் குறித்து பேசி வருகின்றனர் என்றும் கூறினார்.