டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என பாராளுமன்ற செயலகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ந்தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற செயலகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே, அவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என அன்றாடம் உபயோகிக்கப்படும் வார்த்தைகளுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, நாடாளுமன்ற வளாகத்தில் தர்னா, போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த விதிக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.
பாராளுமன்றத்தில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக “காக் ஆர்டர்” தொடர்பாக எதிர்க்கட்சிகளின் சீற்றத்திற்கு மத்தியில் தற்போது, தர்ணாக்கள் குறித்த சுற்றறிக்கை வந்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற செயலக பொதுச்செயலாளர் பி.சி.மோடி அனைத்து எம்.பி.க்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், நாடாளுமன்ற வளாகத் திற்குள் மத நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது, எம்.பி.க்கள் உண்ணாவிரதம், தர்ணா. வேலை நிறுத்தங்களுக்கு பயன்படுத்தக்கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு உறுப்பினர்களின் அன்பான ஒத்துழைப்பைக் கோருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக, எதிர்க்கட்சியினர் ஆளும் அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு அமர்ந்து தர்ணா செய்வதும், ஆர்ப்பாட்டம் நடத்துவம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்ற வரும் ஜனநாயக ரீதியிலான செயல். அரசுக்கு எதிரான தம் நிலைப்பாட்டை தெரிவிக்க எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது வழக்கம். இதற்கு மத்திய பாஜக அரசு இதற்கு தடை விதித்துள்ளது எதிர்க்கட்சிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்திள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேண், விஷ்குருவின் சமீபத்திய சால்வோ — டி(ஹ்)அர்னா மனா ஹை! என குறிப்பிட்டுள்ளார்.