டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு நிறைவுபெற்றது. இதையடுத்து இரண்டாவது கடட அமர்வுக்காக நாடாளுமன்ற  இரு அவைகளும் மார்ச் 9ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடபாண்டின் நாடாளுமன்ற  முதல் கூட்டத்தொடரும், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு  பிப்ரவரி 13ந்தேதியுடன  நிறைவு பெற்ற நிலையில் இரு அவைகளும் மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

நடபாண்டின் நாடாளுமன்ற  முதல் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் முர்மு உரையுடன் ஜனவரி 28ந்தேதி அன்று தொடங்கியது.  கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர்9 உரையாற்றினார். இதைத்தொடர்ந்து,  வரலாற்றில் முதன்முறையாக பிப்ரவரி 1ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனால்,  பிப். 1 ஆம் தேதி 2026 – 27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து குடியரசு தலைவர் உரைமீதான விவாதங்கள் நடைபெற்று வந்தன. கூட்டத்தொடரில் சீன ஆக்கிரமிப்பு, இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கி வந்தன.

இதற்கிடையில், குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்த நிலையில், பிப். 4 அன்று மக்களவையில் தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்ததால் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று தான் கூறியதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறினார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது.

தொடர்ந்து இன்றும் இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், ராணுவ முன்னாள் தளபதி நரவணேவின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவை குறித்து விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. எப்ஸ்டீன் கோப்புகளுடன் தொடர்புடைய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் நடவடிக்கைகள் தொடர்பான விடியோக்களை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் மத்தியஅமைச்சரை வம்புக்கு இழுத்த ராகுல்காந்தியின் நடவடிக்கையும்,  அவரது முதிர்ச்சியற்ற தன்மையை உலகுக்கு உணர்த்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அவையை முடக்கி வந்ததால், கோடிக்கணக்கான மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது. இதைத்  தொடர்ந்து மார்ச் 9 ஆம் தேதிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர்கள் தனித்தனியே அறிவித்தனர்.

இதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13ந்தேதியுடன்  நிறைவடைந்தது. இரண்டாம் அமர்வு மார்ச் 9 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 வரை நடைபெறவிருக்கிறது.

[youtube-feed feed=1]