சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஆலோசனைகள் நடத்த 2 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல்வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு சென்று ஆலோசனை நடத்தி வரும் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையரான ராஜீவ்குமார் 2 நாள் பயணமாக நாளை சென்னை வருகை தருகிறார்.  தொடர்ந்து,  நாளை  நாளை காலை அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை பிற்பகல், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

நாளை மறுநாள் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில தேர்தல் அதிகாரிகள், வருமான வரி, சுங்கத்துறை உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.