டில்லி,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இன்றைய கூட்டுகூட்டத்தில் மத்திய பொதுபட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பொது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
முன்னதாக பாராளுமன்றம் கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் 11.07 மணி அளவில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி 2018-18ம் ஆண்டுக்கான பொது நிதி நிலையை அறிக்கையை தாக்கல் செய்ய தொடங்கினார்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இது. பா.ஜ., அரசு தாக்கல் செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட் இதுவாகும்.
இந்த ஆண்டும் கடந்த ஆண்டு போலவே மத்திய நிதிநிலை அறிக்கையுடன், ரெயில்வே பட்ஜெட்டும் இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.