புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக, மத்திய அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு அலுவலக ரீதியாக வருகைதரும் ஊழியர்களுக்கு, கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கியுள்ளார் துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான வெங்கைய்யா நாயுடு.
அவர் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தவிர, அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு அலுவல்ரீதியாக வருகைதரும் ஊழியர்கள் அனைவருக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என்றுள்ளார் வெங்கைய்யா நாயுடு.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாட்டு பணிகளை மேற்பார்வையிடுவது தொடர்பான மீட்டிங்கில் இவ்வாறு அவர் ஆலோசனை கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் 6 அடிகள் இடைவெளிவிட்டு உறுப்பினர்களுக்கான இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.
இந்த சந்திப்புக் கூட்டத்தில், ராஜ்ய சபா செக்ரட்டரி ஜெனரல் தேஷ் தீபக் வர்மா மற்றும் செயலகத்தின் இதர மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.