சென்னை: தே.ஜ.கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் ஐவேக கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தனர் நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினம் மதியமே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தெரிய வரும்.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 49 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், ஐஜேகே கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஐஜேக தலைவர் பாரிவேந்தரும், அவரது மகன் ரவி பச்சமுத்துவும் அறிவித்துள்ளனர்.
அதன்படி, பல்லாவரம் தொகுதி – வழக்கறிஞர் வெங்கடேசன்.
குன்னம் தொகுதி – சரண்யா அன்பழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஐஜேகே வேட்பாளர்கள் இருவரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவர்.
“முதல்முறையாக சட்டமன்றம் செல்ல வேண்டும் என்பதால் இரட்டை இலை சின்னத்தில் போட்டி; எந்த சின்னத்தில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகிறோம்” ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 49 கட்சிகள், அமைப்புகள்….
[youtube-feed feed=1]