பாரிஸ்: பாரிசில் நடைபெற்று பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீரரான தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் பதக்கம் சென்று சாதனை படைத்துள்ள்ளார். அதே வேளையில் மற்றொரு இந்திய வீரரான ஷரத் வெள்ளிப் பதக்கமும் வென்று, உயரம் தாண்டுதலில் இரு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
பாரிஸ் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார் தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன். பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்துள்ளார்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 இறுதிப் போட்டி நேற்று இரவு 11:50 மணிக்கு நடைபெற்றது. இதில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார் மற்றும் ஷைலேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இந்திய வீரர் ஷரத் வெள்ளி பதக்கமும் மற்றொரு வீரரான மாரியப்பன் தங்கவேலு 1,85 மீட்டர் உயரம் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதனால் இந்தியாவுக்கு உயரம் தாண்டுதலில் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது..
ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்ததுடன், கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வெள்ளியும் வென்றிருந்தார். இந்த நிலையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். பாராலிம்பிக் போம்டிகளில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
வெண்கலம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.