டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இரட்டை வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை மானு பார்க்கர் இன்று காலை தாயகம் திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மானு பார்க்கரை, அவரது ரசிகர்கள், தோளில் தூக்கி வைத்து கொண்டாடினர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மானு பார்க்கரை வரவேற்க விளையாட்டு வீரர்கள், அவரது ரசிகர்கள்,   பாக்கரின் பெற்றோர்கள், உறவினர்கள், குழந்தைப் பருவ பயிற்சியாளர் என அனைவரும்  விமான நிலையத்திற்கு வந்திருந்து அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகடள் நடைபெற்று வருகிறது. இதில் துப்பாக்கி சூடுதல் போட்டியில் இரட்டை வெண்கலப் பதக்கம் வென்ற பதக்க நாயகி மானு பார்க்கர் இன்று டெல்லி வந்தடைந்தார். அவருக்கு  விமான நிலையத்தில்  மாலை மரியாதையுடன் மேள தாளங்கள் வாசித்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக  டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்த  இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கணை மனு பாக்கருக்கு விமான நிலைய ஊழியர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச்சுடும் போட்டியில் பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் அவர் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து கலப்பு அணி பிரிவில் 10மீட்டர் துப்பாக்கிச்சுடும் போட்டியில் மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் வென்றார். தொடர்ந்து 22 வயதான அவர் பெண்களுக்கான 25 மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார், ஆனால் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் அவரது பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா ஆகியோர் #ParisOlympics2024 இல் மனு பாக்கரின் வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பிறகு பெரும் வரவேற்பைப் பெற்றனர்.

இரட்டைப் பதக்கம் வென்ற மனு பாக்கர், “இங்கே இவ்வளவு அன்பைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்…” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.